(ஹனீபா)
இலங்கை சமுர்த்தி அதிகார சபையின் கீழ் கடமையாற்றும் சமுர்த்தி முகாமையாளர்கள் மற்றம் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஓய்வுதியம் பெற்று வகையில் திணைக்கள சேவைக்குள் இணைத்துக் கொள்ளும் அரசாங்கத்தின் நடவடிக்கையின் கீழ் அமைச்சரவையின் அங்கிகாரத்துக்கு அமைவாக பாராளுமன்றத்தின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஒன்றிணைந்த திவிநெகும திணைக்கள நகல் சட்ட மூலத்தை எதிர்த்து மக்கள் விடுதலை முன்னணியை சேர்ந்த தொழிற் சங்கம் மற்றம் சரவணமத்து பாக்கிய ஜோதி என்பவர்களினால் செய்யப்பட்டுள்ள வழக்குகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்தும் ஏற்பாடு செய்யப்பட்ட ஊர்வலம் இன்று (29) அகில இலங்கை சமுர்த்தி மற்றும் விவசாய ஆராய்ச்சி அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தின் அம்பாறை மாவட்ட அமைப்பினால் சம்மாந்துறை நகர மண்டப முற்றத்திலிருந்து ஆரம்பமாகி சம்மாந்துறை ஹிஜ்றா சந்திக்கு சென்று மீண்டும் நகர மண்டபத்தை வந்தடைந்தது.
இந்நிகழ்வில் அம்பாறை கரையோரப் பிரதேசங்களைச் சேர்ந்த அதாவது சம்மாந்துறை , கல்முனை, நாவிதன்வெளி, சாய்ந்தமருது, காரைதீவு, நிந்தவூர், அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, ஆலையடி வேம்பு ,திருக்கோவில்,பொத்தவில் அகிய சகல பிரதேச செயலகப் பிரிவுகளையும் சேர்ந்த சமர்த்தி முகாமையார்கள் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உற்பட இலங்கை சமுர்த்தி அதிகார சபையைச் சேர்ந்த அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment