(ஹனீபா)
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தேசிய காங்கிரஸின் வெற்றியாளர்களைக் கௌரவித்து அக்கரைப்பற்று மாநகர மற்றும் பிரதேச சபை மக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊர்வலமும், வாக்களித்த மக்களுக்கு நன்றி நவிலும் நிகழ்வும் நேற்று (10) அக்கரைப்பற்று இசங்கடிச்சீமை கிராம பள்ளிவாசலிலிருந்து துஆப் பிராத்தனையுடன் ஆரம்பித்து அக்கரைப்பற்றின் முழு நகரையும் சென்றது.
இந்நிகழ்வில் தேசிய காங்கிரசின் தேசிய தலைவரும் உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா, வெற்றிபெற்ற வேட்பாளர்களான எம்.எல்.ஏ.அமீர், சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன், எம்.எஸ்.உதுமாலெப்பை ஆகியோருடன் அக்கரைப்பற்று மாநகர முதல்வர் ஏ.அஹமட்சக்கி, பிரதி முதல்வர் எம்.எம்.எம்.ரிஸாம், தவிசாளர் றாசீக் உட்பட மாநகர மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களுடன் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment