இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

9/22/2012

மாகாண அமைச்சரவையில் தமிழருக்கு அமைச்சுப்பதவி வழங்கப்பட வேண்டும்: தவம்



கிழக்கு மாகாண சபையின் அமைச்சரவையில் தமிழர் ஒருவருக்கும் அமைச்சுப்பதவி வழங்க வேண்டும் என்பதில் கொள்கையளவில் நாம் அரச தரப்பை வலியுறுத்தி வருவதாகவும் இது தொடர்பாக தலைவர் ரவூப் ஹக்கீம் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருவதாகவும் மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் தெரிவித்தார். 

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், 

மாகாணசபை அமைச்சரவையில் பிள்ளையான் இடம்பெறாவிட்டால் அதனைக் கபளீகரம் செய்ய தேசிய காங்கிரஸ் கபட நாடகம் ஒன்றை அரங்கேற்றி வருவதாகவும் இதனைத் தான் வன்மையாகக் கண்டிக்கிறேன். 

கிழக்கு மாகாண சபை என்பது மூவினத்துக்கும் சொந்தமானது அதில் தனியே பெருமளவு முஸ்லிம் அமைச்சர்கள் இடம்பெற்றால் அந்தச் சபையின் மதிப்பு இல்லாமற் போய்விடும் என்றார். 

தேசிய காங்கிரஸின் மாகாண சபை உறுப்பினரும் எம்.எஸ்.உதுமாலெப்பைக்கும் மாகாண சபையில் அமைச்சுப் பதவி வழங்கப்படுமா என்று கேட்ட போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
virakesari

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா