இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

9/23/2012

இழுபறி நிலையில் வடமத்திய மாகாண முதலமைச்சர் பதவி! நீதிமன்றம் செல்வேன் என பேர்டி பிரேமலால் எச்சரிக்கை


வடமத்திய மாகாணசபையின் முதலமைச்சர் பதவி வேறு யாருக்கும் வழங்கப்பட்டால் நீதிமன்றின் உதவியை நாட நேரிடம் என முன்னாள் முதலமைச்சர் பேர்டி பிரேமலால் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
சட்ட விரோதமான முறையில் முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டால் அதற்கு எதிராக வழக்குத் தொடரப்படும். ஆளும் கட்சியின் பெரும்பான்மையான உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்ற நபரே முதலமச்சராக நியமிக்கப்பட வேண்டும்.
அரசியல் சாசன அடிப்படையில் இவ்வாறே முதலமைச்சர் தெரிவு மேற்கொள்ளப்பட வேண்டும்.
13ம் திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் பெரும்பான்மை ஆதரவுடைய ஒருவரே முதலமைச்சராக நியமிக்கப்பட முடியும்.
அதி கூடிய விருப்பு வாக்குகளோ அல்லது வேறு காரணிகளையோ கருத்திற் கொண்டு முதலமைச்சரை தெரிவு செய்ய முடியாது என பேர்டி பிரேமலால் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஆளும் கட்சியைச் சேர்ந்த 21 உறுப்பினர்களில் 11 பேர் பேர்டி பிரேமலாலுக்கு ஆதரவளிப்பதாக சத்தியக்கடதாசி மூலம் அறிவித்தள்ளனர்.
பேர்டி பிரேமலால் முதலமைச்சராக நியமிக்கப்படாவிட்டால் மாகாணசபையின் தலைவர் மற்றும் பிரதித் தலைவர் பதவிகள் எதிர்க்கட்சிக்கு செல்லக் கூடிய அபாயம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா