(ஹனீபா)
(இது கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் )
கிழக்கு மாகாணத்தில் தமிழர்களும், முஸ்லீம்களும், சிங்களவர்களும் நிம்மதியாகவும் பரஸ்பர புரிந்துணர்வுடனும் ஒற்றுமையாக ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு வாழ்ந்து வருகின்றனர். அவர்களின் நிம்மதியினையும் ஒற்றுமையினையும் சீர்குலைக்கும் நடவடிக்கையினை அந்நிய சக்திகளுடன் இணைந்து தமிழ்தேசிய கூட்டமைப்பும் சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸூம், செய்து வருவதாக உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சரும் தேசிய காங்கிரஸின் தேசிய தலைவருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நேற்று (03) சம்மாந்துறை பொலிஸ் வீதியில் நடைபெற்ற கூட்டத்தில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். சம்மாந்துறை பிரதேசசபை உறுப்பினர் அச்சு முஹம்மட் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் இங்கு அமைச்சர் அதாஉல்லா தொடர்ந்து உரையாற்றுகையில்,
கிழக்கு மாகாணத்திலிருந்து எந்தவொரு அரசியல் தலைமைகளும் உருவாகிவிடக்கூடாது என்பதில் ஹக்கீம் தொடர்ச்சியாக கண்ணும் கருத்துமாக இருந்து வந்திருக்கின்றார் அதை இன்னும் செய்து வருகின்றார் அவ்வாறு ஆண்டாண்டு காலமாக முஸ்லீம் சமுகத்தை அடமானம் வைத்து அவர்களுக்கு கிடைக்க வேண்டிய அரசியல் அதிகாரங்களை இல்லாமல் செய்யும் கைங்கரியத்தை செய்து வருகின்றார்.
இது இவ்வாறிருக்க இந்தக் கிழக்கு மாகாணத்திலே வழுகின்ற மக்களை மீண்டும் இருண்ட யுகத்துக்குள் இட்டுச் செல்வதற்கான கைங்கரியத்தை செய்து வருகின்றார் இவருக்கு ஆண்டாண்டு காலமாக எமது மக்கள் முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீமின் பசப்பு வார்த்தைகளை நம்பி வாக்களித்த காரணத்துக்காக நான் தொடர்ந்து கிழக்குமாகாணத்தின் பல பிரதேசங்களிலும் தெழிவாக கூறிவந்துள்ள விடயத்தை உறுதிப்படுத்தும் வகையில் நேற்று மருதமுனையில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழ் தேசிய கூடட்மைப்பின் தலைவர் சம்பந்தன் மற்றும் சுரேஸ் பிரேமசந்திரன் ஆகியோர்கள் உரையாற்றுகையில் தெளிவாக கூறுகின்றார்கள் நாங்கள் முஸ்லீம் காங்கிரஸூடன் தெளிவான ஒப்பந்தமொன்றை செய்துள்ளோம் அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் அவர் கூறினார் இங்குள்ள மக்கள் அனைவரும் வெத்திலை சின்னத்தை தவிர எந்த சின்னத்துக்கும் வாக்களியுங்கள் என தெளிவாக கூறினார்.
இங்கு ஹக்கீம் வந்து எமது மக்களிடத்தில் கூறிவருகின்றார் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் முஸ்லீம் காங்கிரசுக்கும் எந்த தொடர்புமில்லை என்கிறார் இது என்ன நாடகம் என நான் கேட்கின்றேன் இங்கு தெளிவாக கூறிய சம்மந்தனின் கூற்று தொடர்பாக நான் கூறிக்கொள்வது எமது மக்களை மீண்டும் பலிக்கிடாக்கள் ஆக்கி அதில் குளிர்காய துடித்துக் கொண்டிருக்கின்றனர் வடக்கையும் கிழக்கையும் மீண்டும் இணைத்து இங்குள்ள வழங்களை கபளிகரம் செய்வதற்கு சூரையாடுவதற்கான சூட்சுமங்களை செய்து வருகின்றனர்.
பொதுவாக இன்று ஐக்கிய தேசிய கட்சியும், தமிழ்தேசிய கூட்டமைப்பும், முஸ்லீம் காங்கிரஸூம் ஒன்றிணைந்து வெளிநாட்டு சக்திகளின் நிகழ்ச்சி நிரலுக்கு இணங்க செயற்பட்டு வருகின்றனர் எனவே நமது மக்கள் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் நாம் புத்திக்கூர்மையுடன் செயற்பட வேண்டும். நாம் பெற்றுக் கொண்ட சுதந்தரத்தை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் அதனால் தற்போதுள்ள இன உறவு பாதிக்கப்படாமல் நாம் தொடர்ந்தும் ஐக்கியத்துடன் வாழ சரியான முடிவுகளை எடுக்கவேண்டும்.
0 comments:
Post a Comment