இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

9/22/2012

சுவர்ணவாஹினி நபிகளாரை அவமதிக்கும் படத்தை வெளியிட உள்ளதாக வெளியான குறுஞ்செய்தி பொய்யானது: சுவர்ணவாஹினி அதிகாரிகள்


-kkyi-
சுவர்ணவாஹினி தொலைக்காட்சி நிறுவனம் தற்போது பேசப்படும் முஸ்லிம்களை புன்படுத்தும் எந்த படத்தையும் ஒளிபரப்புவதற்கு எந்தவொரு கட்டத்திலும் தீர்மானம் ஒன்று எடுத்திருக்கவில்லை என்று அதனது நிர்வாகம் தம்மிடம் தெரிவித்ததாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ்.ஹமீட் தெரிவித்துள்ளார்.
கடந்த சில தினங்களாக எனது தொலைபேசிக்கும், அதே போன்று இன்னும் எத்தனையோ பேர்களுக்கும் குறுஞ் செய்தியொன்று வந்தது.
அது  சுவர்ணவாஹினியில் முஹம்மத் நபிக்கு எதிரான அந்த திரைப்படம் காணப்பிக்கப்பட போகின்றார்களாம்,அதற்கு எதிர்ப்பு தெரிவிக்குமாறே இந்த செய்தி அமைந்திருந்தது.தனக்கு இந்த செய்தி கிடைத்ததும் உரிய ஊடக நிறுவனத்தின் முக்கியஸ்தர்களுடன் தொடர்பு கொண்டு கேட்ட போது அவர்கள் இதனை தெரிவித்தாக அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
இலங்கையில் ஊடகத் துறையில் சுவர்ணவாஹினி மிகவும் முக்கிய இடத்தை வகிப்பதாகவும், அதனது வளர்ச்சியில் காழ்ப்புணர்வு கொண்டவர்கள் திட்டமிட்டு இந்த  தகவல்களை பரப்பியுள்ளதாகவும் நிறுவனத்தின் பொறுப்பு வாய்ந்த அதிகாரி தம்மிடம் தெரிவித்ததாக செயலாளர் ஹமீட் கூறினார்.
அதே வேளை இந்த குறுஞ் செய்தி குறித்து பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி தெரிவித்துள்தாக கூறிய அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ்.ஹமீட், தமக்கு வரும் குறுஞ் செய்திகளின் உண்மைத் தன்மை குறித்து பொதுமக்கள் அறிந்து கொண்டதன் பின்னர், அதனை ஏனையவர்களுக்கு தெரிவிப்பதே நல்லது என்றும் கூறினார்.
அதே வேளை இஸ்லாத்தையும்,முஹம்மத் (ஸல்) அலைஹிவஸல்லம் அவர்களையும் அவமதிக்கும் விதத்தில் அமெரிக்கா அரசின் உதவியுடன் வெளிவந்துள்ள இந்த திரைப்படத்தை எமது கட்சியின் தலைவர் அமைச்சர் றிசாத் பதியுதீன் தலைமையில கூடிய கட்சியின் அதியுயர் பீடம்  வண்மையான கண்டனத்தை தெரிவித்துள்ளதாவும் செயலாளர் வை.எல்.எஸ்.ஹமீட்  கூறினார். இதனை அமெரி்க்க அரசுக்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா