சுழற்சி முறையில் முதலமைச்சர் பதவியை பகிர்ந்து கொள்வது தொடர்பில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. தலா இரண்டு ஆண்டுகள் ஆட்சி அதிகாரத்தை பரிமாறிக் கொள்ளும் திட்டமொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்தில் ஆட்சி அமைப்பது தொடர்பில் இன்று அலரி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை, முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் சந்திக்க உள்ளார்.
இன்று காலை பத்து மணியளவில் இந்த விசேட சந்திப்பு நடைபெறவுள்ளது. இந்தப் பேச்சுவார்த்தையின் போது ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்ளும் நோக்கில் ஆளும் கட்சியின் முக்கிய பிரமுகர் ஒருவர் பேரம் பேசி வருவதாக இரகசியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, ஆளும் கட்சிக்கு ஆதரவளிப்பது தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸ் இரண்டு நிபந்தனைகளை முன்வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. முதலமைச்சர் பதவி வழங்கப்பட வேண்டும் அல்லது அமைச்சரவையில் இரண்டு பிரதி அமைச்சர் பதவிகளும், மாகாணசபையில் இரண்டு அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட வேண்டுமெனவும் முஸ்லிம் காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.






0 comments:
Post a Comment