இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

9/12/2012

அரசாங்கத்துடன் பேசுவதற்கு சிரேஷ்ட அங்கத்தவர்கள் பலர் ஆர்வம்; த.தே.கூட்டமைப்புடனும் பேசுவோம்: ஹக்கீம்

TM
கிழக்கு மாகாண சபை ஆட்சி தொடர்பாக அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க வேண்டுமென கட்சியின் சிரேஷ்ட அங்கத்தவர்களில் பெரும்பாலானோர் விரும்புவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்தது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவு யாருக்கு என்பதை தீர்மானிக்கும் கலந்துரையாடலில் முஸ்லிம் முதலமைச்சர் பதவியும் கரிசனைக்குரிய முக்கிய விடயங்களில் ஒன்றாகும் அக்கட்சி தெரிவித்துள்ளது.

கிழக்கு மாகாண சபையில் 14 ஆசனங்களைக் கொண்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பும்,  11 ஆசனங்களைக் கொண்ட  தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஆட்சியை அமைப்பதற்காக, 7 ஆசனங்களைக்கொண்ட முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவை நாடியுள்ளன.

இந்நிலையில், யாருக்கு ஆதரவளிப்பதென்பதை தீர்மானிப்பதற்காக  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சிரேஷ்ட தலைவர்களும் கிழக்கு மாகாண சபைக்கு தெரிவான கட்சியின் உறுப்பினர்களும் நேற்று கொழும்பில் சந்தித்து கலந்துரையாடினர். 

இவ்விடயம் தொடர்பாக மூன்று யோசனைகள் முன்வைக்கப்பட்டதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் கூறினார். 

'இது குறித்து அரசாங்கத்துடன் கலந்துரையாட வேண்டுமென பெரும்பாலானோர் விரும்பினர். வேறு சிலர் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் கலந்துரையாட வேண்டுமென விரும்பினர். மேலும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆகியனவற்றைக் கொண்ட கூட்டணி அமைக்கப்பட வேண்டுமென கூறினர். இது ஒரு சுவாரஷ்யமான யோசனை' என அவர் கூறினார்.

எனினும், அனைத்து தெரிவுகளையும் கட்சி திறந்துவைத்துள்ளதாகவும் இன்று புதன்கிழமை மீண்டுமொரு சுற்று கலந்துரையாடல் நடைபெறும் எனவும் அமைச்சர் ஹக்கீம் கூறினார். 

"தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் நாங்கள் பேச்சுவார்த்தையை ஆரம்பிப்போம். எவரையும் பகைக்காமல் இவ்விடயத்தை அணுக விரும்புகிறோம். சில விட்டுக்கொடுப்புகளுக்கும் நாம் தயார். சமூகத்தின் கரிசனைக்குரிய பல விடயங்கள் அவற்றுக்கு நாம் முன்னுரிமையளிக்கின்றோம்" என  அவர் கூறினார்.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா