(ஹனீபா)
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை ஊழியர்கள் நலன்புரி அமைப்பின் ஆண்டு நிறைவு விழாவும், ஓய்வு பெற்றுச் சென்றவர்களை கௌரவிக்கும் நிகழ்வும் நேற்று முந்தினம் வைத்தியசாலையில் நலன்புரி அமைப்பின் தலைவர் எம்.ஏ. நசுறுதீன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் வைத்திய அத்தியட்சகர் எம்.எம். தாஸிம் உட்பட வைத்திய அதிகாரிகள் மற்றும் நலன்புரி அமைப்பின் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
மேலும் இந்நிகழ்வில் நீண்டகாலமாக பணியாற்றி ஓய்வூ பெற்றுச் சென்ற ஊழியர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
0 comments:
Post a Comment