இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

10/19/2012

பட்டதாரி பயிலுனர்களுக்கான நியமனக் கடிதங்கள்


அம்பாறை மாவட்டத்திலுள்ள 605 பட்டதாரிகளை பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் இணைத்துக் கொள்வதற்கான பட்டதாரி பயிலுனர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் ஆரம்ப நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை அம்பாறை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் நீல் த அல்விஸ் தலைமையில் இடம்பெற்ற வைபவத்தில் பிரதம அதிதியாக உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லா கலந்து கொண்டார்.

சம்மாந்துறை, அக்கரைப்பற்று, நிந்தவூர், அட்டாளைச்சேனை, இறக்காமம் மற்றும் பொத்துவில் ஆகிய பிரதேச செயலகங்களில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ள பட்டதாரிகளுக்கு இந்நியமனக் கடிதங்கள் இவ்வைபவத்தில் அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.எம்.நௌஷாத், அம்பாறை மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.அன்வர்தீன், பிரதேச செயலாளர்கள் மற்றும் பட்டதாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா