-தாஹா நழீம்-
இலங்கை கல்வி அமைச்சின் கீழ் உள்ள பாடசாலைகளை சிலவற்றை பிள்ளை நேயப் பாடசாலைகளாக பிரகடனப்படுத்தி பிள்ளை நேயத்தை இப்பாடசாலைகளில் மேற்கொள்ளும் திட்டத்திற்குகமைவாக,
இந் திட்டத்திற்கு நிதியுதவி வழங்கும் நிறுவனங்களாக யுனிசெப் மற்றும் அவுஸ்ரெலின் எயிட் என்ற இரு நிறுவனங்களும் இதற்காக பல்வேறு வேலைத்திட்டங்களை வழங்கி வருகின்றது என்பதை இங்கு குறிப்பிடுதல் பொருத்தமாகும்.
பிள்ளை நேயப்பாடசாலையின் அடிப்படையிலான ஆறு பரிமாணங்களாக.
- 01. பிள்ளைகளின் உரிமைகள்
- 02. பால் நிலை சமத்துவம்
- 03. கற்றல் பேறுகளின் விருத்தி
- 04. பிள்ளையின் ஆரோக்கியமும், பாதுகாப்பும்
- 05. மாணவர்களின் குடும்பப் பிண்ணனி
- 06. சிறுவர் நேயக் கொள்கைகள்
என்பவையே இவைகளாகும். மேற்கூறிய செயற்பாடுகளின் செறிவு பற்றி நேரடியான ஆய்வினை செய்வதற்காக யுனிசெப் நிறுவன பிரதிநிதிகள் இப்பாடசாலையில் ஆய்வினை 2012.10.25 மேற்கொண்டனர்.
அத்துடன் இப்பாடசாலையை மென்மேலும் விருத்தி செய்தி எதிர்காலத்தில் சிறப்பான செயற்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்கும் இந்த ஆய்வுகள் ஒரு துடுப்பாக அமைக்கூடுமென இப்பிரநிதிகளும் இப்பாடசாலை சமூகமும் ஆருடம் தெரிவித்துள்ளன.
0 comments:
Post a Comment