இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

10/31/2012

சம்மாந்துறையில் நாளை சாகித்திய விழா இடம்பெறவுள்ளது


(ஹனீபா)
சம்மாந்துறை அன்னை இன்று விழாக் கோலம் பூனுகின்றாள் (2012.11.01) தினம் சம்மாந்துறைப் பிரதேசத்தில் நடைபெறும் சாகித்திய கலாசார பெருவிழாவையொட்டியே இவ்வாறு விழாக் கோலம் பூண்டள்ளது சம்மாந்துறை மண்பதி.

சம்மாந்துறைப் பிரதேச செயலக சாகித்திய சலாசார பேரவையினால் இந்த பெருவிழா ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெறுகின்றது.
சாகித்திய சலாசார பேரவையின் தலைவரும் பிரதேச செயலாளருமான ஏ.மன்சூர் தலைமையில் சம்மாந்துறை அப்துல் மஜீட் நகர மண்டபத்தில் மாலை வசந்தமாக பல்வேரு கலைரசனையூடன் கூடிய பல நிகழ்வூகளுடன் இப் பெருவிழா இடம்பெறுகின்றது.

சாடிக்கு ஏற்ற மூடி வாய்த்தால் போல் சம்மாந்துறைப் பிரதேச செயலகத்துக்கு ஒரு உதவிப் பிரதேச செயலாளர் ஏ.எம்.அப்துல் லத்தீப் நடக்கின்ற நிகழ்வூகள் அனைத்தும் தரமானதாகவூம் கலை ரசனையூடன் நீடித்து நிலைக்கக் கூடிய வகையிலும் நோத்தியான முறையில் இந்தக் கலாசார நிகழ்வூ நடைபெற வேண்டும் என்பதில் மிகவூம் கண்னும் கருத்துமாக இருந்து நிகழ்வூகளை நெறிப்படுத்தி வருகின்றார்.

பிரதேச செயலாளரும் , சாகித்திய கலாசார பேரவையின் தலைவருமான ஏ.மன்சூர் அவர்களின் ஆளுமைத் திறமையினாலும், சிறத்த நிர்வாக முகாமைத்துவத்தினாலும் தமது கலாசார பேரவை உறுப்பினர்களின் முழு ஒத்துழைப்புடனும் பிரதேச செயலக உத்தியோகத்தா;களின் உதவி ஒத்துழைப்புக்களுடன் இந்தப் பிரதேச சாகித்திய கலாசார பெருவிழா இன்று ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வழாவாக இந்தப் பிராந்தியத்தில் இடம் பிடிக்கும் வகையில் ஆவண செய்துள்ளார்.

இப் பெருவிழாவில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் நீல் தி அல்வீஸ் கலந்து கொள்கின்றார். கேளரவ அதிதிகளாக கிழக்கு மாகாண சுகாதார, சுதேச வைத்திய, சமுகசேவை, சிறுவர் பராமரிப்பு, மகளிர் விவகாரம்இ கூட்டுறவூ , விளையாட்டுத்துறை அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் , கிழக்குமாகாண சபை உறுப்பினர் எம்.எல்.ஏ.அமீர், சம்மாந்துறைப் பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.எம்.நௌஷாட் அவர்களும் விஷேட அதிதிகளாக மேலதிக அரசாங்க அதிபர் அசங்க அபேவர்த்தன, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் விஜித் கனுகல, கிழக்கு மாகாண கலாசார திணைக்களத்தின் பணிப்பாளர் டீ.டபிள்யூ.ய.வெலிகல, இலங்கை தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தின் உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயீல், சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர் மற்றும் அதிதிகளாக பிரதம நம்பிக்கையாளர் ஐ.ஏ.ஜப்பார், சம்மாந்துறை வீரமுனை சிந்தா யாத்திரைப் பிள்ளையார் கோவில் தலைவர் ஜீ.ராஜ கோபாலப்பிள்ளை, பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஜயந்த தஹனக்க, யூ.என்.டீ.நிறுவனத்தின் அம்பாறை மாவட்ட தலைமை அதிகாரி  எம்.ஏ.சலீம் உட்பட பலர் கலந்து கொள்ளவூள்ளனர்.

இந்த விழாவில் சம்மாந்துறை பிரதேசத்தை சோந்த பல்துறைகளைச் சோந்த பின்வரும் 19 முத்துக்கள் கௌரவம் பெறுகின்றனார். இவற்றில் கலாநிதி கே.கோவிந்தராஜன்(உபவேந்தர் கிழக்குப் பல்கலைக் கழகம்), கலாநிதி எஸ்.எல்.அகமட்லெப்பை (சிரே~;ட விரிவூரையாளர் தென் கிழக்குப் பல்கலைக் கழகம்) இ கலாநிதி எம்.ஐ.எம்.கலீல் (சிரே~;ட விரிவூரையாளா; தென் கிழக்குப் பல்கலைக் கழகம்), கலாநிதி எம்.எஸ்.எம்.சலீம் (சிரே~;ட விரிவூரையாளர். பேராதனைப் பல்கலைக் கழகம்), கலாநிதி எஸ்.எல்.றியாஸ் (ஆசிரியா;  சஃது ஹிஜ்றா வித்தியாலயம்) ஆகியோர்களும். ஊடகவியலாளர்களான ஏ.ஜே.எம்.ஹனீபா, என்.எம்.புவாட், எம்.சீ.அன்சார், கவிஞா; யூனுஸ் கே றஹ்மான், எஸ்.எம்.எம்.ஜவாட், இர்~hட்.ஏ.காதர், ஏ.சீ.எம்.கலீலுh;றஹ்மான், யூ.எல்.எம்.றியாஸ்.மற்றும்
இலங்கையின் முதலாவது ஹாபிழ் முஹம்மட் அலி, அமெரிக்காவில் வசிக்கும் சம்மாந்துறை இலங்கை சம்பியன் எம்.எம்.முகம்மது சரீப், சுற்றுப்புற சுழல் ஆர்வலர்களான அதிபர் கே.எல்.தசூல்,ஆசிரியை திருமதி சித்தி சரீபா .எம். நஸீர், சமுக நல மேம்பாட்டு ஒன்றியம்இ சுழல் நன்பர்கள் கூட்டமைப்பு என்பனவூம் இந்த பிரதேச சாகித்திய கலாசார பெருவிழாவில் சாகித்திய விருது பெறவூள்ளனர்.

அத்துடன் இவ்விழாவில் சர்வதேச, தேசியஇ மாகாணஇ மாவட்ட, பிரதேச ரீதியான போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற முதன் நிலையாளார்கள் 224 சாதனையாளா;களும் சான்றிதழ்கள்மற்றும் பரிசில்கள் என்பன வழங்கி கௌரவிக்கப்படவூள்ளமையூம் குறிப்பிடத்தக்க விடயமாகும்.
அத்துடன் இவ்விழாவூக்கு அணிகலனாய் அமையூம் வகையில் சம்மாந்துறை மண்ணின் வரலாற்றுச் சிறப்புக்களை உள்ளடக்கிய ஒரு வரலாற்று ஆவணமாக சுமாh; 300 பக்கங்களை கொண்ட “பட்டறை” எனும் சிறப்பு மலரும் வெளியிடப்படவூள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

சம்மாந்தறை மண்பதியின் சிறப்புக்களை எடுத்துக் கூறும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாகித்திய கலாசாரப் பெருவிழா தொடா;பாக பேரவையின் தலைவரும்இ பிரதேச செயலாளருமான ஏ.மன்சு+h; விடுத்துள்ள செய்தியில்
ஒரு சமூகத்தின்இ பிரதேசத்தின் பாரம்பரிய சமூக விழுமியங்களை கட்டிக் காப்பதில் அங்கு வாழ்ந்தஇ வாழ்ந்து கொண்டிருக்கின்ற மக்களின் வாழையடி வாழையாக பேணிப் பாதுகாக்கப்படும் கலைஇ கலாசாரப் பண்பாடுகள் முக்கிய பங்கினை வகிக்கின்றன. அந்தவகையில்இ சம்மாந்துறை மண் பதியின் பாரம்பரிய மண் வாசனையை மணம் பரப்பச் செய்வதில் அன்று முதல் இன்று வரை கலைஞர்களும் எழுத்தாளHகளும் பெரும் பங்காற்றிக்      கொண்டிருக்கின்றார்கள்.

அக்காலத்திலிருந்தே சம்மாந்துறை எல்லைக்குள் வாழ்ந்த மக்கள் பாரம்பரியமாகக் கவி பாடுதல்இ நாடகம் நடித்தல்இ இசைக்கச்சேரி நடத்தல்இ சிலம்படிஇ சீனடிஇ கோலாட்டம்இ வாள்வீச்சு போன்ற இன்னோரன்ன கலை கலாசார  நிகழ்ச்சிகளில் பங்கேற்றமையால் அவர்களின் பெயர்களுடன் அக் கலைகளின் பெயர்களும் இணைந்தவாறு நிலைத்து இன்று வரை பேசப்படுகின்றது.

ஐம்பதுகளின் பின் பாடசாலைகளில் கலாமன்றங்களில்; நாடகங்களை மேடையேற்றல்இ கலை கலாசார போட்டிகளை ஏற்பாடு செய்தல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபட்டதனால் இளைஞர்களிடையே கலை நிகழ்ச்சிகள் குறித்த விழிப்புணர்வூகள் தோன்றின. பாடசாலைகளில் நிகழும் மாணவர் மன்றங்கள்இ தமிழ் மொழித் தினப் போட்டிகள்இ கலை விழாக்கள் என்பன இவற்றுக்கு மேலும் உரமூட்டின.
எண்பதுகளின் பிற் பகுதிகளில் நம் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண நிலை காரணமாக மேற்படி நிகழ்வூகளை கிரமமாக மேற்கொள்வதில் ஏற்பட்ட தொய்வூ நிலை காரணமாக இத்தகைய கலை கலாசார விழுமியங்கள் முற்றாக மறைந்து விடுமோ எனும் அச்ச நிலைமை தோன்றியது. இதன் காரணமாக இவற்றைக் கட்டிக் காக்க வேண்டிய பொறுப்பு எமது பிரதேச செயலகத்திற்கும் பிரதேச செயலாளர் என்ற வகையில் எனக்கும் இன்றியமையாத ஒரு சமூகக் கடப்பாடாக இருந்ததுஇ இருக்கின்றது.
அந்த வகையில் சாகித்திய விழாக்களின் நடாத்துகை என்பது இன்றியமையாதது. ஏனெனில்இ   சாகித்திய விழாக்களின் மூலம் இலக்கியவாதிகளின் திறமைகளுக்கு களம் அமைத்துக் கொடுக்கப்படுகின்றதுஇ அவர்களின் திறமைகள் புடம் போடப்படுகின்றன. எமதூர் இலக்கியவாதிகளை கௌரவப்படுத்தி கை தூக்கி விடும் நன் நோக்கத்தின் பொருட்டு எமது பிரதேச செயலகத்தினால் சில வருடங்களுக்கு முன்னர் “கலை இலக்கிய கலாசாரப் பேரவை” எனும் ஓர் அமைப்பு மாறன் யூ+.ஸெயின் அவர்களின் முயற்சியினால் பிரதேச செயலாளரின் தலைமையின் கீழ் உருவாக்கப்பட்டு மாகாண கலாசார திணைக்களத்தில் பதிவூ செய்யப்பட்டது.

இதன் மூலம் எமது பிரதேச செயலகம் 2009ஆம் ஆண்டு “பட்டறை” என்னும் விழா மலருடன் மிகப் பிரமாண்டமான சாஹித்திய கலாசார பெரு விழாவொன்றை நடாத்தி 37 போ; விருதுகளும்இ சான்றிதழ்களும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். அதனைத் தொடர்ந்து பிரதி வருடமும் கலை இலக்கிய கலாசாரப் போட்டிகளை நடாத்தி சான்றிதழ்கள் வழங்கி வருகின்றௌம். இவ்வருடமும் “பட்டறை” மலருடன் பிரமாண்டமான சாஹித்திய கலை கலாசார பெரு விழாவை நடாத்த முடிந்ததையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன்.

பிரதேச கலை இலக்கிய கலாசார பேரவையின் தலைவராக பிரதேச செயலாளராகிய நானும்இ துணைத் தலைவர்களாக மாறன் யூ+. ஸெயின்இ உதவி பிரதேச செயலாளர் ஏ.எம். அப்துல் லத்தீப் ஆகியோரும்இ செயலாளராக உளவளத்துணையாளர் எம்.எஸ்.எம்.ஜறூன் ஷரீப்இ துணைச் செயலாளராக எஸ். மகேஸ்வரன்இ விழா அலுவலக செயலாளராக பதவிநிலை உதவியாளர் அல்-ஹாஜ் எம்.ஐ. அப்துH றஹீம்இ பொருளாளராக ஏ.எல்.எம் மஹ்றுப் கணக்காளர் ஆகியோரும் தெரிவூ செய்யப்பட்டதுடன் ஒன்பது குழுக்களும் அமைக்கப்பட்டு அதற்குறிய தலைவா;களும் நியமிக்கப்பட்டு அவா;களுடைய பணிகளை சரியாக முன்னெடுத்ததன் பயனாக இந்த விழா சம்மாந்துறை மன்னில் இன்று சிறப்புப் பெறுகின்றது.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா