
இந்த சட்ட மூலத்திற்கான வாக்கெடுப்பை ஒத்தி வைக்க கோருமாறு, முஸ்லிம் காங்கிரஸின் பொது செயலாளர் ஹசன் அலி, கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களிடம் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
எனினும் இதனை மீறி, மாகாண சபை உறுப்பினர்கள் நேற்று திவிநெகும சட்டமூலம் ஆதரித்து வாக்களித்தனர். இதனால் கிழக்கு மாகாண சபையில் இந்த சட்ட மூலம் 7 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட முஸ்லிம் காங்கிரிஸின் பிரதி செயலாளர் நிசாம் காரியப்பர், மாகாண சபை உறுப்பினர்கள் கட்சி தலைமையின் உத்தரவை மீறி செயற்பட்டதாக குற்றம் சுமத்தினார். இந்த நிலையில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரிஸின் மாகாண சபை உறுப்பினர்களின், இந்த செயற்பாட்டுக்கு எதிரான நடவடிக்கைகள் எவையும் மேற்கொள்ளப்படுமா? என்று அவரிடம் வினவப்பட்டது.
இந்த சட்டமூலம் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரிஸின் தலைவர் ரவுப் ஹக்கீம் நாட்டில் இல்லாத வேளையில், சமர்ப்பிக்கப்பட்டமை தமக்கு அதிர்சியளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்
0 comments:
Post a Comment