(ஹனீபா)
இலங்கை சமுர்த்தி அதிகார சபையின் மனிதவள அபிவிருத்திப்பிரிவின் வேண்டுகோளுக்கு அமைவாக இலங்கை மத்திய வங்கியின் ஏற்பாட்டில் அரசாங்கத்தின் திவிநெகும திணைக்களத்தின் நுண் நிதி வழங்கலின் மூலம் சமுக மட்ட அமைப்புக்களை எவ்வாறு கட்டியெழுப்புவது என்பது தொடபாக சமுர்த்தி அதிகாரிகளுக்கான முழு நாள் செயலமர்வு நேற்று(01)இலங்கை மத்திய வங்கியின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்~ மற்றும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுணர் அஜீத் நிவாட்கப்றால், உதவி ஆளுணர் டபிள்யூ.எம். கருணாரத்ன, இலங்கை சமுர்த்தி அதிகார சபையின் மனிதவள அபிவிருத்திப்பிரிவின் பணிப்பாளர் மடவளகமகே, சமுர்த்தி வங்கி நிதிநடவடிக்கை பிரிவின் பணிப்பாளர் சந்திர திலக உட்பட இலங்கை மத்திய வங்கியின் பணிப்பாளர்கள் மற்றும் நாட்டின் பாலபாகங்களிலிருந்தும் தெரிவூ செய்யப்பட்ட சமுர்த்தி முகாமையாளர்கள், உதவிமுகாமையாளர்கள், சமர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment