இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

11/02/2012

சம்மாந்துறையில் சாகித்திய விழா (படங்கள் இணைப்பு)


(ஹனீபா)

சம்மாந்துறைப் பிரதேச செயலக சாகித்திய கலாசார பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சாகித்திய கலாசார பெரு விழாவூம் “பிரதேச சாகித்திய விருது” வழங்கும் நிகழ்வூம் (01.11.2012) பிற்பகல் 2.30 மணிக்கு சாகித்திய சலாசார பேரவையின் தலைவரும் பிரதேச செயலாளருமான ஏ.மன்சூர் தலைமையில் சம்மாந்துறை அப்துல் மஜீட் நகர மண்டபத்தில் நடைபெற்றது.
இப் பெருவிழாவில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபார் நீல் தி அல்வீஸ் கலந்து கொண்டார்.

கௌரவ அதிதிகளாக கிழக்கு மாகாண சுகாதார, சுதேச வைத்திய, சமுகசேவை, சிறுவா; பராமரிப்பு, மகளிர் விவகாரம்,கூட்டுறவூ , விளையாட்டுத்துறை அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர், மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினா; எம்.எல்.ஏ.அமீர் அவர்களும்
விN~ட அதிதிகளாக சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர், பிரதம நம்பிக்கையாளா; ஐ.ஏ.ஜப்பார், இறக்காமம் பிரதேச செயலாளர் எம்.எம்.நஸீர்,திருமலை மாவட்ட கணக்காய்வூ அத்தியட்சகர் அமீர்அலி, பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஜயந்த தஹனக்க, யூ.என்.டீ.நிறுவனத்தின் அம்பாறை மாவட்ட தலைமை அதிகாரி  எம்.ஏ.சலீம் சம்மாந்துறை வீரமுனை சிந்தா யாத்திரைப் பிள்ளையார் கோவில் தலைவர் ஜீ.ராஜ கோபாலப்பிள்ளை உட்பட பலா; கலந்து கொண்டனர்.

விழாவில் சம்மாந்துறை பிரதேசத்த்தின் பல்துறைகளைச் சோ;ந்த பின்வரும் 19 அதிதிகள் கௌரவிக்கப்பட்டனர்.
இவற்றில் கலாநிதி கே.கோவிந்தராஜன் (உபவேந்தர் கிழக்குப் பல்கலைக் கழகம்), கலாநிதி எஸ்.எல்.அகமட்லெப்பை (சிரே~;ட விரிவூரையாளர் தென் கிழக்குப் பல்கலைக் கழகம்) இ கலாநிதி எம்.ஐ.எம்.கலீல் (சிரே~;ட விரிவூரையாளர் தென் கிழக்குப் பல்கலைக் கழகம்), கலாநிதி எம்.எஸ்.எம்.சலீம் (சிரே~;ட விரிவூரையாளர் பேராதனைப் பல்கலைக் கழகம்), கலாநிதி எஸ்.எல்.றியாஸ் (ஆசிரியா;  சஃது ஹிஜ்றா வித்தியாலயம்) ஆகியோர்களும். ஊடகவியலாளர்களான ஏ.ஜே.எம்.ஹனீபா, என்.எம்.புவாட் எம்.சீ.அன்சார், கவிஞா; யூனுஸ் கே றஹ்மான், எஸ்.எம்.எம்.ஜவாட், இர்~hட்.ஏ.காதர், ஏ.சீ.எம்.கலீலுர் றஹ்மான், யூ.எல்.எம்.றியாஸ்.மற்றும்
இலங்கையின் முதலாவது ஹாபிழ் முஹம்மட் அலி, அமெரிக்காவில் வசிக்கும் சம்மாந்துறை இலங்கை சம்பியன் எம்.எம்.முகம்மது சரீப்இ சுற்றுப்புற சு+ழல் ஆர்வலா;களான அதிபர் கே.எல்.தசு+ல்,ஆசிரியை திருமதி சித்தி சரீபா .எம். நஸீர், சமுக நல மேம்பாட்டு ஒன்றியம், சு+ழல் நன்பர்கள் கூட்டமைப்பு என்பனவூம் இந்த பிரதேச சாகித்திய கலாசார பெருவிழாவில் சாகித்திய விருது பெற்றுக் கொண்டனா;.
அத்துடன் இவ்விழாவில் சா;வதேசஇ தேசியஇ மாகாணஇ மாவட்டஇ பிரதேச ரீதியான போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற முதன் நிலையாளா;கள் 224 சாதனையாளா;களும் சான்றிதழ்கள் மற்றும் பரிசில்கள் என்பன வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
அத்துடன்; சம்மாந்துறை மண்ணின் வரலாற்றுச் சிறப்புக்களை உள்ளடக்கிய ஒரு வரலாற்று ஆவணமான சுமார் 300 பக்கங்களை கொண்ட “பட்டறை” எனும் சிறப்பு மலரும் வெளியிடப்பட்டன இந்நுhலின் முதல் பிரதியினை விழாவின் தலைவா; ஏ.மன்சு+ரினால்; விழாவின் பிரதம அதிதி இ கௌரவ அதிதிகள் மற்றும் விN~ட அதிதிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டன.







0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா