கல்முனை, சாய்ந்தமருது கடற்கரையில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு மர்மப்பொருளொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இனங்காணப்படாத மர்மப்பொருள் ஆய்வுகளுக்காக கொண்டவட்டுவான் இராணுவ பொறியியல் பிரிவு அனுப்பப்பட்டள்ளது.
கடற்கரை ஓரத்தில் கரையொதுங்கிய நிலையில் காணப்பட்ட வெடிபொருள் வகையை ஒத்த பொருள் பொலிஸாரினால் இனங்காணப்படவில்லை. இதனையடுத்து, இராணு பொறியியல் பிரிவினர் வரவழைக்கப்பட்டனர். எனினும், அவர்களினாலும் இனங்கான முடியாத நிலையில் மேலதிக ஆய்வுக்காக கொண்டு சென்றுள்ளனர்.
இது வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட வெடிபொருள் ரகத்தைச் சார்ந்தாக இருக்கலாம் என இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இது வெளிநாட்டில் கப்பல் ஒன்றிலிருந்து கைவிடப்பட்ட நிலையில் கரை ஒதுங்கியிருக்கலாம் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
.jpg)
0 comments:
Post a Comment