இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

11/02/2012

சம்மாந்துறை அல்மர்ஜான் மகளிர் கல்லூரியில் புதிய கட்டிட அடிக்கல் நாட்டு நிகழ்வு (படங்கள்)


(ஹனீபா)
பிரதேசத்தின் கல்விஅபிவிருத்திஇசுகாதாரம் உட்பட சகல அபிவிருத்தி விடயத்திலும் பிரதேச அரசியல் தலைமைகள் அனைத்தும் ஒன்றினைந்து மக்களுக்கு பணியாற்ற வேண்டும் அவ்வாறு இணைந்து பணியாற்றுவதன் மூலமே எமது பிரதேசம் அபிவிருத்தி கானும் இதற்கு சகலரும் ஒத்துழைப்புக்களை வழங்கவேண்டும் இது இந்த நாட்டுக்கே முன்மாதிரியாக எடுத்துக்காட்டாக அமைய வேண்டும்.

என்று அரசியல் ரீதியாக மூன்று துருவங்களாக செயற்பட்டு வரும் சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸின் கிழக்கு மாகாண சுகாதாரஇ சுதேச வைத்தியத்துறை அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர், தேசிய காங்கிரஸின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எல்.ஏ.அமீர், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சம்மாந்துறை தொகுதி அமைப்பாளரும் சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளருமான ஏ.எம்.எம்.நௌஷாட் ஆகியோர் ஒரே மேடையிலிருந்து ஒருமித்த கருத்தை வெளிப்படுத்தினர்.

இன்று (02) மஹிந்தோதய பாடசாலை அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் சம்மாந்துறை அல்மர்ஜான் மகளிர் கல்லுhரியில் பல்தேவை ஆய்வூ கூடத்துக்கான அடிக்கல் நடும் வைபவத்தில் அதிதிகளாக கலந்து கொண்டு உரையாற்றும் போது இவ்வாறு ஒன்றினைந்த கருத்துக்களை வெளியிட்டனர்.

அதிபர் ஹபீறா சலீம் தலைமையில் நடைபெற்ற  இவ்வைபவத்தில் கிழக்குமாகாண கல்வி,காணி அமைச்சர் விமலவீர திசாநாயக்க, கிழக்கு மாகாண சுகாதார, சுதேச வைத்தியத்துறை அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர், கிழக்கு மாகாண சபை உறுப்பினா; எம்.எல்.ஏ.அமீர், சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளார் ஏ.எம்.எம்.நௌஷாட்,வலயக்கல்விப் பணிப்பாளா; எம்.கே.எம்.மன்சூர், பொறியியலாளர் நவாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா