இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

11/13/2012

சம்மாந்துறைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிவில் பாதுகாப்பு குழு பிரதிநிதிகளுக்கான ஒன்று கூடல்

(ஹனீபா)


பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கம் நெருக்கமான அன்னியோன்னிய உறவை ஏற்படுத்தம் உயர்ந்த அற்பணிப்புடனான சேவையினை பொலிஸ் திணைக்களம் மக்களுக்கு செய்துவருகின்றது கடந்த மூன்று தசாப்த காலங்களாக எமது நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலையிலிருந்த விடுபட்டு இன்று மக்கள்; சுதந்திரமாக வாழ்வதற்கு பொலிஸ் திணைக்களமும் பாரிய பங்களிப்பை செய்துள்ளது என கல்முனைப் பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் காமினி தென்னக்கோண் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறைப் பொலிஸ் பிரிவூக்குட்பட்ட சம்மாந்துறை, மாவடிப்பள்ளி, மாளிகைக்காடு, காரைதீவூஇ நிந்தவூர் ,அட்டப்பள்ளம், மல்வத்தை, வளத்தாப்பிட்டி போன்ற பிரதேசங்களைச் சொ;ந்த சிவில் பாதுகாப்பு குழு பிரதிநிதிகளுக்கான ஒன்று கூடல் இன்று (13) சம்மாந்துறை அல்மர்ஜான் மகளிர் கல்லுhரி கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார் அவர் மேலும் உரையாற்றுகையில் நாம் இன்று பயங்கரவாத செயற்பாடுகளில் இருந்து பாதுகாப்பு பெற்று இருப்பினும் நாம் இன்று எமத சமூகத்தின் மத்தியில் காணப்படும் கொலை,கொள்ளை, இலஞ்சம் போன்ற தீய செயற்பாடுகளில் ஈடுபட்டுவரும் 5வீதமானவர்களின் செயல்களிலிருந்த மக்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எம்மிடமுள்ளது அதனை சிறப்பாக வெற்றிகரமான முறையில் நடைமுறைப்படுத்தும் நொக்குடன் நாட்டின் சகல பிரதேசங்களிலும் சிவில்பாதுகாப்பு குழுக்கள் உருவாக்கப்பட்டு சிறப்பாக செயற்பட்டு வருகின்றது.

அற்பணிப்புடன் பணியாற்றும் சிவில்பாதுகாப்பு குழு பிரதிநிதிகளுக்கு பொலிஸ் திணைக்களத்தின் சார்பான நன்றிகளை தெரிவித்தக் கொள்வதுடன் இந்தப் பிராந்தியத்தின்; புதிய பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகராக பணியினை ஏற்றுள்ள நான் பொதுமக்களாகிய உங்களுடன் சிறந்த நட்புறவூடன் மக்களுக்க பணியாற்ற திடம் பூண்டுள்ளேன் எனவூம் தெரிவித்தார்.

சம்மாந்துறைப் பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரி எஸ்.எல்.சம்சுதீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தின் சிவில் பாதுகாப்பு பொறுப்பதிகாரி எஸ்.எம்.அமீர், ஐ.பி, கொப்சோ நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரும்,பிரதம நம்பிக்கையாளருமான ஐ.ஏ.ஜப்பார் , செயற்திட்டப் பணிப்பாளர் ஏ.ஜே.காமில் இம்டாட்இ பாடசாலை அதிபர்  திருமதி ஹபீறா சலீம்உட்பட பலர் கலந்து கொண்டனர்.


0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா