-ஹனீபா-
அம்பாறை, ஆலையடிவேம்பு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கோளாவில் முதலாம் பிரிவில் நிர்மாணிக்கப்பட்ட 'திரிய பியச' வீடு கையளிக்கும் நிகழ்வு நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது.
இலங்கை சமுர்த்தி அதிகாரசபையின் சமூக அபிவிருத்திப் பிரிவின் ஏற்பாட்டில் இவ்வீடு நிர்மாணிக்கப்பட்டது.
இதன்போது நிர்மாணிக்கப்பட்ட இவ்வீடு திறந்துவைக்கப்பட்டு; அதன் திறப்பு வீட்டு உரிமையாளரிடம் கையளிக்கப்பட்டது.
ஆலையடிவேம்பு பிரதேச சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் என்.நேசராஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேனவும்; கௌரவ அதிதியாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வீ.ஜெகதீசனும்; அதிதிகளாக சமுர்த்தி முகாமையாளர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.
0 comments:
Post a Comment