-தாஹா நழீம்-
இன்று யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாண பாடசாலைகளில் பிள்ளை நேயம் தொடர்பான கருப்பொருள் எவ்வாறு பின்பற்றப்படுகின்றது என்பதை செயற்பாட்டாளராக செயற்படும் UNICEF மற்றும் Australian Aid போன்ற நிறுவனங்கள் நாளுக்கு நாள் பரிசிலனை செய்து வருகின்றன. இதற்காக பல கோடி ரூபாய்க்களை செலவு செய்து வருகின்றது என்றால் அதனை யாரும் மறுப்பதிற்கில்லை.
மேலும் இப்பாடசாலைகளின் செயற்பாடுகளை விருத்தி செய்வதற்கு இப்பாடசாலைகளிலுக்கிடையில் காணப்படுகின்ற விடயங்களை ஏனைய பாடசாலைகள் பின்பற்றி தங்களுடைய பாடசாலையில் அதனை பிரயோகிப்பதன் ஊடாக பிள்ளை நேயக் கோட்பாடுகளான ஆறு கோட்பாடுகளை விருத்தி செய்யும் நோக்கும் கல்முனை கல்வி மாவட்ட மாவட்டத்தில் 15 சிறந்த பிள்ளை நேயப்பாடசாலைகளை தெரிவு செய்து அதில் மிகச் சிறந்த பாடசாலை தெரிவு செய்வதற்கான போட்டி (Sharing CFS Best Practice (District Level) 2012.11.06 ஆந் திகதியன்று கமு/ கமு/வெஸ்லி உயர் கல்விப் பாடசாலையில் நடாத்தப்பட்டது. இது ஒரு கல்வி மாவட்ட மட்டப் போட்டியாகும்.
இந்தப் போட்டியானது கிழக்கு மாகாண கல்வி அமைச்சினால் கோரப்பட்ட சுற்று நிருபத்திற்கமைவாக, நேர்மைாயன முறையில் ஒரு திறந்த போட்டியாக நடைபெற்றது. அத்துடன் இதில் வலயக்கல்வி அதிகாரிகள் நடுவர்களாக செயற்பட்டார்கள் என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும். அத்துடன் பங்கு பற்றும் பாடசாலைகளிலிருந்து ஐந்து ஆசிரியர்கள் வீதம் அவர்கள் முன்னிலையில் இப் போட்டி நடாத்தப்பட்டது என்பதும் இங்கு கோடிட்டு காட்ட வேண்டும்.
கல்முனை உதவிக்கல்விப் பணிப்பாளர், M. நஜிம் அவர்களிடம் பெற்றிக்கான கேடயத்தினை இப்பாடசாலையின் அதிபர் ரீ.எம். தௌபீக், ஆசிரியர் ஏ.எம். தாஹா நழீம் அவர்களும் இணைந்து பெற்றுக்கொள்ளும் காட்சி இது.
0 comments:
Post a Comment