சம்மாந்துறை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் கரங்கா வட்டையில் நான்கு நீர்ப்பாசன கதவுகள் கொண்ட பாலம் ஒன்றும் பள்ளவெளி வட்டையில் இரண்டு நீர்வடிகான் வசதியும் கிரான்குளம் வட்டையில் சிறு கடவைப்பாலம் ஒன்றும் நெல்லிக்காடு வட்டையில் இருகதவுகள் கொண்ட இரு நீர்ப்பாசன அணைக்கட்டுகளும் கொண்ட விவசாய உட்கட்டமைப்பு அபிவிருத்தி வசதிகளை இலங்கைக்கான ஜப்பானிய தூதுவராலயம் 9.6 மில்லியன் ரூபாவை நிதியுதவியாக வழங்கியது.
இதன் மூலம் சம்மாந்துறையில் உள்ள 771 விவசாய குடும்பங்கள் பயனடைந்தள்ளன.
இச் செயற்திட்டத்தை அம்பாறை மாவட்டத்திலுள்ள கிழக்கு புணர்வாழ்வு நிவாரண அமைப்பு நிறுவனத்தினால் அமுல்படுத்தப்பட்டு பூரணப்படுத்தப்பட்டு மக்களுக்கு கையளிக்கும் வைபவம் அண்மையில் சம்மாந்துறை பிரதேச நீர்ப்பாசன காரீயாலய பொறியியலாளர் தலைமையில் ஜப்பானிய தூதுவராலயத்தின் Economic cooperation section Second secretary Mr. DOI TOYOTERU அவர்களினால் வைபவரீதியாக திறந்துவைக்கப்பட்டு மக்களிடம் கையளிக்கப்பட்டது இன்நிகழ்வில் பெருந்திரளான விவசாய பொது மக்களும் உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
0 comments:
Post a Comment