ஒரு விடயத்தை மேம்படுத்த வேண்டுமானால் அந்த விடயத்தில் ஆணிவேராக இருப்பவர்களை ஊக்குவிப்பதும், பாராட்டுவதும் மனிதப் பண்புகளின் ஒன்றாகும்.
சம்மாந்துறை முஸ்லிம் மகளிர் வித்தியாலயத்தில் இந்த ஆண்டு நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற 26 மாணவர்கள், அவர்களுக்கு வழிகாட்டியாக இருந்த அதிபர் மற்றும் ஆசிரியர்களை கௌரவிக்கும் நிகழ்வு பாடசாலை கேட்போர் கூடத்தில் 2012.12.05 அந் திகதி அதன் அதிபர் ரீ.எம். தௌபீக் தலைமையில் நடைபெற்றது.
இந்த பாரட்டு விழாவில் சித்தி பெற்ற மாணவர்களையும் மற்றும் அவர்களுக்கு வழிகாட்டியாக இருந்த ஆசிரியைகளான ஜனாபா RUM. மன்சூர், AB. பரீதா RU. றிம்லான் ஆகியோரும் கௌரவிக்கப்பட்டனர். இந்நிகழ்வு சிறப்பாக நடைபெற பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களின் பெற்றோர்கள் ஏற்பாடுகளை செய்திருந்தார்கள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
இவ்வைபவத்தில் புலமைப்பரிசில் நிகழ்வில் வலயத்தில் 179 புள்ளிகளைப் பெற்று முதலாம் இடத்தினை தட்டிக்கொண்ட MBM. தஸ்னீம் என்னும் மாணவனுக்கு விசேட பரிசில்களும் பாராட்டுகளும் வழங்கப்பட்டது என்பதை சுட்டிகாட்டுதல் பொருத்தமாகும்.
0 comments:
Post a Comment