இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

12/06/2012

அம்பாறை மாவட்டத்தில் தொடர்ச்சியாக 3 நாட்களுக்கு மின்வெட்டு


அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பகுதியில் நாளை வெள்ளிக்கிழமை தொடக்கம் மூன்று நாட்களுக்கு தொடர்ச்சியாக மின்சாரம் தடைப்படும் என அறிவிக்கப்படுகிறது.

அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பகுதியில் நாளை வெள்ளிக்கிழமை தொடக்கம் மூன்று நாட்களுக்கு தொடர்ச்சியாக மின்சாரம் தடைப்படும் என அறிவிக்கப்படுகிறது.

நாளை வெள்ளிக்கிழமை காலை 8.00 மணி தொடக்கம் எதிர்வரும் திங்கட்கிழமை அதிகாலை 1.00 மணி வரை மின் தடை அமுலில் இருக்கும் என்று கல்முனைப் பிராந்திய மின் பொறியியலாளர் எம்.ஆர்.எம்.பர்ஹான் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, நிந்தவூர், காரைதீவு, சாய்ந்தமருது, கல்முனை, சம்மாந்துறை, நாவிதன்வெளி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்லாறு பிரதேசத்திலுமே மின் தடை இடம்பெறும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.   

பாரிய திருத்த வேலைகளுக்காகவே இம்மின்சாரத் தடை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவித்த பொறியியலாளர் எம்.ஆர்.எம்.பர்ஹான், இந்நாட்களில் ஏதாவது ஒரு சில நேரங்களில் பொது மக்களின் நலன் கருதி குறித்த சில நிமிடங்களுக்கு மின்சாரத்தை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டிருப்பதாகவும் அதனால் மின் தடை அமுலில் உள்ளபோது எவரும் தமது வீடுகளில் தனிப்பட்ட முறையில் மின்சார திருத்த வேலைகளில் ஈடுபட வேண்டாம் என தாம் கண்டிப்பாக கேட்டுக் கொள்வதாகவும் அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு இலங்கை மின்சார சபை பொறுப்பாக இருக்காது எனவும் கூறினார். 

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா