இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

12/17/2012

மயங்கி விழுந்த ஹிலரி!

அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலரி கிளிண்டன் திடீர் என்று மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.


அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலரி கிளிண்டன் கடந்த 4 ஆண்டுகளில் 112க்கும் மேற்பட்ட நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.


தொடர்ந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் ஹிலரி நேற்று திடீர் என மயங்கி விழுந்தார்.


அவரது வயிற்றில் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதால் மயங்கியதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.


உடனடியாக மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. உடல் நலம் சரியாகும் வரை அவர் வீட்டில் இருந்தே பணிபுரிவார் என்று கூறப்படுகிறது.

அவரை தினமும் வைத்தியர்கள் கண்காணித்து வருவார்கள் என்று தெரிகிறது.


வைத்தியர்களின் பரிந்துரையின் பேரில் அவர் வீட்டில் இருந்தே பணி புரிகிறார். அவர் விரைவில் அலுவலகத்திற்கு செல்ல ஆர்வமாக உள்ளதாக அதிகாரிகள் வட்டாரம் தெரிவித்துள்ளனர்.


ஹிலரி ஐரோப்பாவில் சுற்றுப்பயணம் செய்து விட்டு கடந்த வாரம் அமெரிக்கா திரும்பியதும் அவரது வயிற்றில் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் அவர் கடந்த வாரம் பணியாற்றவில்லை. இந்த பிரச்சனையால் அவர் தனது வட ஆப்பிரிக்க பயணத்தை ரத்து செய்துள்ளார் என்பது குறி்ப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா