இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

12/14/2012

குடும்ப பெண்ணின் சடலம் மீட்பு

அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பாலமுனையில் குடும்பம் பெண்ணொருவரின் சடலத்தை பொலிஸார் நேற்று வியாழக்கிழமை மீடடுள்ளனர்.

தனது தாய் மற்றும் 4 வயதுடைய மகனுடன் பாலமுனைக் கிராமத்தில் வசித்து வந்த பெண்ணின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

சம்மாந்துறையை சொந்த இடமாகக் கொண்டவரான இவரின் கணவர் மத்தியகிழக்கு நாடொன்றில் பணி புரிவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சம்மாந்துறையைச் சேர்ந்த இவர் பாலமுனைக் கிராமத்தில் தனது 4 வயதுடைய மகன் மற்றும் தாயாருடன் சிலகாலமாக வசித்து வந்தார். இவர்கள் தமக்கென புதிய வீடொன்றினையும் அங்கேயே நிர்மாணித்து வருகின்றனர்.

நிர்மாண வேலைகளுக்காக வந்திருந்த நிர்மாணத் தொழிலாளர்கள் வேலை முடிந்து சென்றுள்ளனர். 

இதன் பின்னரே குறித்த பெண்ணை காணாது தேடியவேளையில் அவரது சடலம் வீட்டிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 
TM

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா