கல்முனை மாநகர சபையினால் நடுக்கட்டு உத்தியோகத்தர்கள் மற்றும் பாவனையாளர்கள் சேவைக்கட்டணம் ஆகியவைகளை அறவீடு செய்வதற்கான உத்தியோகத்தர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு கல்முனை மேயர் சிராஸ் மீராசாஹிப் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது பாவனையாளர்கள் சேவைக்கட்டணம் அறவீடு செய்வதற்கான உத்தியோகத்தர்கள் 05 பேருக்கும் நடுக்கட்டு உத்தியோகத்தர்கள் 20 பேருக்கும் நியமனங்கள் வழங்கப்பட்டன.
அத்தோடு 'புதிய சிந்தனை நோக்கிய பயணம்' என்னும் பிரஜைகள் கைநூல் சேவை வழிகாட்டியும் மேயரினால் சம்பிரதாயபூர்வமாக வெளியிட்டு வைக்கப்பட்டது.
இந்நூலில் கல்முனை மாநகர சபையினால் ஆற்றப்படும் சேவைகளும் அவற்றிற்கான கட்டண விபரங்கள் மற்றும் தொடர்பு கொள்ளவேண்டிய அதிகாரிகளின் தொலைபேசி இலக்கங்கள், மாநகர சபையின் சொந்த நிதியிலிருந்து 2011 மற்றும் 2012ஆம் காலப்பகுதியில் நிறைவேற்றப்பட்ட வேலைத்திட்டங்களின் விபரம், புறநெகும வேலைத்திட்ட விபரம் மற்றும் எதிர்கால வேலைத்திட்டங்கள் போன்ற பல்வேறு தகவல்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் அதிதிகளாக சம்மாந்துறை, காரைதீவு பிரதேச சபை தவிசாளர்களான எமஎம்.நௌசாத், கே.இராசலிங்கம், மாநகர ஆனையாளர் ஜே.லியாகத்அலி, மாநகர சபை உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
0 comments:
Post a Comment