இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

12/31/2012

இமயமலை பகுதியில் பெரும் பூகம்பம் ஏற்படும் ஆபத்து: விஞ்ஞானிகள்

இந்தியாவின் இமயமலை பகுதியில் பாரிய பூகம்பம் ஏற்பட வாய்ப்புள்ளதாக சிங்கப்பூரைச் சேர்ந்த நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் ஆய்வுக்குழுவொன்று எச்சரித்துள்ளது.

அந்நாட்டின் வட பகுதியில் அமைந்துள்ள இமயமலையில் பூகம்ப ஆபத்து அதிகம் உள்ள பகுதியாக கருதப்படுகின்றது. இந்த பகுதியில் கடந்த 1897, 1905, 1934, 1950 ஆகிய ஆண்டுகளில் பெரிய அளவில் பூமி அதிர்ச்சி ஏற்பட்டது.
அதன்போது 7.8 முதல் 8.9 ரிச்டர் அளவு வரை பூகம்பம் ஏற்பட்டது. அதன்பிறகும் அந்த பகுதியில் பலமுறை பூமி அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
ஆனால் வருங்காலத்தில் இமயமலை பகுதியில் கடுமையான அளவில் பூகம்பம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என போல் டப்போனியர் தலைமையிலான விஞ்ஞானிகள் குழு நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது.                               
இந்த குழுவில் நேபாளம், பிரான்ஸ் நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகளும் இடம் பெற்று இருந்தனர்.
இந்தியாவில் இமயமலை பகுதியில் 1255 மற்றும் 1934 ஆகிய ஆண்டுகளில் இரு மிகப்பெரிய பூமி அதிர்ச்சிகள் ஏற்பட்டுள்ளன.

குறிப்பாக 1934 ஆம் ஆண்டு ஏற்பட்ட பூகம்பத்தின் போது இமயமலையின் தென் பகுதியில் பூமிக்கு அடியில் உள்ள நிலத்தட்டில் 150 கிலோ மீட்டர் நீளத்துக்கும் மேலாக வெடிப்பு ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியின் நிலப்பரப்பிலும் சிறிது மாற்றங்கள் நிகழ்ந்தன.
வருங்காலத்தில் இமயமலை பகுதியில் பெரிய அளவில் பூகம்பங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்த பூகம்பங்கள் 8 முதல் 8.5 ரிச்டர் அளவு வரை இருக்கக்கூடும்.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா