(ஹனீபா)
அம்பாறை மாவட்டத்தின் நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட 10ஆம் கொளனி வெஹரகம ஸ்ரீ சுபனாராம விகாரை வளவில் நிர்மாணிக்கப்பட்ட புதிய றோஹன முனசிங்க தஹம் பாடசாலை நேற்று (26) மாலை வைபரீதியாக திறந்து வைக்கப்படடது.
மத்தியமுகாம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் வழிகாட்டலின் கீழ் மத்தியமுகாம் பொலிஸ் பிரிவிலுள்ள சிவில் பாதுகாப்பு குழுவினரினதும், பிரதேச தனவந்தர்களினதும் நிதியுதவியுடன் இப்பாடசாலை கட்டி முடிக்கப்பட்டு திறந்து வைக்கப்படுகினறமை குறிப்பிடத்தக்கதாகும்.
நிலைய பொறுப்பதிகாரி றோஹனமுனசிங்க தலைமையில் நடைபெற்ற இவ்வைபவத்தில்; கிழக்கு மாகாண சிரேஸ்ட பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர பிரதம அதிதியாக கலந்து கொண்டார்;. கைளரவ அதிதிகளாக அம்பாறை மாவட்ட உதவி பொலிஸ் மா அதிபர் ஐ.எம்.கருணாரத்ன, நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினரும், சுதந்திரக் கட்சி அமைப்பாளருமான ஏ.கே.ஏ.சமட் உட்பட சர்வமதத் தலைவர்கள், பொலிஸ், இராணுவ அதிகாரிகள்;;, சிவில் பாதுகாப்பு குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வின் போது மத்தியமுகாம் பிரதேச பாடசாலைகளில் கல்வி பயிலும் மூவினங்களையும் சேர்ந்த 300 மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களும், கண்பார்வை குறைந்தவர்களுக்கு இவலசமாக மூக்குக் கண்ணாடிகளும் வழங்கி வைக்கப்பட்டன.









0 comments:
Post a Comment