அம்பாறை மாவட்டத்தின் மத்தியமுகாம,; சவளக்கடை பிரதேசத்தில் இயங்கி வருகின்ற 'வன்சிக்ஸ்' விளையாட்டு கழகத்தின் ஓருவருட நிறைவை முன்னிட்டு ரீ 20 சம்பியன் லீக் போட்டி தொடர் கடந்த நான்கு தினங்களாக இடம்பெற்றது. இப்போட்டித் தொடரின் இறுதிப் போட்டி இன்று (11) வீரத்திடல் அல்-ஹிதாயா மஹாவித்தியாலய மைதானத்தில் இடம்பெற்றது.
இப்போட்டித் தொடரில் றோயல், கோல் ஸ்டார், வன்சிக்ஸ், எசியன் லெவன், சாந்தகுறூஸ் ஆகிய விளையாட்டுக் கழகம் பங்கு கொண்டன.
20க்கு 20 போட்டித் தொடரின் இறுதிப் போட்டிக்கு கோல் ஸ்டார் அணியும், சாந்தகுறூஸ் அணியும தகுதி பெற்றன. இறுதிப் போட்டியில் கோல் ஸ்டார் விளையாட்டுக் கழகம் சாந்தகுறூஸ் விளையாட்டுக் கழகத்தை 70 ஓட்டங்களால் வெற்றி கொண்டு வெற்றிக் கேடயத்தை சுவீகரித்துக் கொண்டது.
இன்றைய இறுதி நாள் நிகழ்வில் கிழக்குமாகாண சபையின் சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல், நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினர்களான எம்.ஐ.தஜாப்தீன், எஸ்.சுதர்சன், சதுஃகமுஃவீரத்திடல் அல்-ஹிதாய மஹாவித்தியாலய அதிபர் எம்.எல்.வதுர்த்தீன், சதுஃ அல்-ஹிறா வித்தியாலய அதிபர் ஏ.எல்.ஸனூஸ் உற்பட பலர் கலந்துகொண்டனர்
.
0 comments:
Post a Comment