இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

1/14/2013

சவூதி பாராளுமன்றத்துக்கு 30 பெண்கள் தெரிவு

VDI :சவூதி அரேபியாவின் பாராளுமன்றமான சூரா கவுன்சிலுக்கு முதன் முறையாக 30 பெண்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 150 பேர் கொண்ட குறித்த சபையின் அடுத்த 4 வருட பதவிக்காலத்துக்கே இவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சவூதி மன்னரான அப்துல்லாஹ் பின் அப்துல் அசீஸ் அல் சவுத் பெண்களின் சூரா சபை அங்கத்துவத்தின் எண்ணிக்கையில் அதிகரிப்பை செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டதுடன் குறித்த 30 பேரின் பெயர் விபரங்களையும் வெளியிட்டுள்ளார்.
முன்னர் 20 ஆக காணப்பட்ட குறித்த அங்கத்துவ கோட்டா தற்போது 30 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஏனைய அமைச்சர்களுக்கும் சூரா சபை அங்கத்தவர்களுக்கும் இருக்கும் அதிகாரங்கள் அனைத்தும் குறித்த 30 பெண் உறுப்பினர்களுக்கும் உள்ளதாக மன்னர் சுட்டிக்காட்டியுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா