இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

1/08/2013

தயவு காட்டுங்கள்! அஜ்மல் கசாப்பின் 4 வரி கதறல் கடிதம்

தனக்கு தயவு காட்டுமாறு, மும்பை தாக்குதல் குற்றவாளி அஜ்மல் கசாப், உருது மொழியில் ஜனாதிபதிக்கு எழுதிய கடிதம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
மும்பையில் கடந்த 2008ம் ஆண்டு, நவம்பர் மாதம் 26ம் தேதி லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 166 பேர் கொல்லப்பட்டனர்.
தாக்குதல் நடத்திய 10 பயங்கரவாதிகளில் 9 பேர் சண்டையில் கொல்லப்பட்டு, 25 வயதான அஜ்மல் கசாப் மட்டும் உயிருடன் பிடிபட்டான்.
பின்னர் மும்பை ஆர்தர் ரோடு ஜெயிலில் அடைக்கப்பட்ட கசாப்புக்கு மும்பை ஐகோர்ட் மரண தண்டனை விதித்தது. இதை சுப்ரீம் கோர்ட்டும் உறுதி செய்தது.
இதையடுத்து, கசாப் தாக்கல் செய்த கருணை மனு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜயால் நிராகரிக்கப்பட்டு, நவம்பர் 21ம் தேதி கசாப் தூக்கிலிடப்பட்டான்.
இந்நிலையில், கசாப் ஜனாதிபதிக்கு எழுதிய கருணை மனு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
லக்னோவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஊர்வசி சர்மா என்பவர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், பெற்றுள்ள இந்த கடிதத்தில், உருது மொழியில் தப்பும் தவறுமாக தனக்கு கருணை வேண்டி கசாப் கடிதம் எழுதியுள்ளான்.
அதில் அவன் குறிப்பிட்டுள்ளதாவது:
“மதிப்பிற்குரிய ஐயா, நான் சுப்ரீம் கோர்ட்டால் அதிகபட்ச தண்டனை (மரண தண்டனை) விதிக்கப்பட்டுள்ளேன்.
தாங்கள் தயை கூர்ந்து மரண தண்டனையிலிருந்து என்னை விடுவிக்க வேண்டும். தூக்கு மேடையிலிருந்தும் என்னை விடுவிக்க வேண்டும். இது எனது தாழ்மையான வேண்டுகோள்” என தெரிவித்துள்ளான்.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா