TCN : கேரளாவில், ஆறாம் வகுப்பு படிக்கும் பக்கத்து வீட்டு மாணவனை, கத்தியை காட்டி மிரட்டி, ஆசைக்கு பணிய வைத்த, 42 வயது பெண் கைது செய்யப்பட்டார்.
கேரளா, எர்ணாகுளம் மாவட்டம், வடக்கே காட்டை சேர்ந்தவர் ஷாகிதா, 42. கணவரால் கைவிடப்பட்டவர். இவரின், மூன்று குழந்தைகளும் கணவருடன் வசிக்கின்றனர்.
தனியே வசித்து வந்த இவருக்கு, பக்கத்து வீட்டைச் சேர்ந்த, ஆறாம் வகுப்பு படிக்கும் சுஜித், 12, (பெயர் மாற்றப்பட்டுள்ளது), வீட்டுப் பொருட்கள் வாங்கி தருவது உட்பட, பல உதவிகளை செய்து வந்தான்.
இந்நிலையில், கடந்த மாதம், 11ம் தேதி, காலை, 9:00 மணிக்கு, மளிகைப் பொருட்களை வாங்கி வந்த, சுஜித்தை, தன் படுக்கை அறைக்கு அழைத்துச் சென்ற ஷாகிதா, அவனுடன் உடல் உறவு கொள்ள முயற்சித்தார். பயந்த மாணவன் அங்கிருந்து ஓட முயன்றான்.
அதற்குள் ஷாகிதா, கத்தியை காட்டி, அவனை மிரட்டி, பலாத்காரம் செய்துள்ளார். வலியால் அவதிப்பட்ட மாணவன், இது குறித்து யாரிடமும் சொல்லாமல், தாலுகா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளான்.
அதேநேரத்தில், பள்ளியில் தன் சக மாணவர்களிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளான். இவ்வாறு விஷயம் வெளியே தெரியவர, போலீசார் விசாரணை நடத்தினர். முடிவில், ஷாகிதாவை கைது செய்தனர்.







0 comments:
Post a Comment