பாதுக்கை மீகொடவில் கருக்கலைப்பு நிலையமொன்றை நடாத்திவந்ததாகக் குறிப்பிடப்படும் 77 வயது வைத்தியத் தாதியொருவர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளதாகப் பொலீசார் தெரிவிக்கின்றனர். காதலர்கள் போல அவரிடம் உதவி கேட்டுச் சென்ற பொலீஸ் பெண் ஊழியரும், பொலிஸைச் சார்ந்த ஓர் ஆண் ஊழியரும் சேர்ந்து இந்த தேடுதல் வேட்டையை நடாத்தியுள்ளனர்.
கருக்கலைப்புக்காக அவர் பெறுகின்ற தொகை ரூபா பத்தாயிரம் என்பதும் தெரியவந்துளளது. பொலீஸ் பெண் ஊழியருக்கு ஊசியேற்ற முனைந்த போது பொலீஸாரினால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார். அவரிடம் உதவிக்கு இருந்தவர் மனநலம் குறைந்த பெண் ஒருவர் என்பதும் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. குறைந்தளவு அவர், 50 க்கு மேற்பட்ட கருக்கலைப்புக்களையேனும் செய்திருக்கக் கூடும் என பொலீஸார் சந்தேகிக்கின்றனர்.






0 comments:
Post a Comment