IM: விஸ்வரூபம் திரைப்படத்தை தயாரித்து இயக்கியதன் மூலம் கமலுக்கு பைத்தியம் பிடித்துள்ளது என்று இயக்குனர் பாலுமகேந்திரா கூறியுள்ளார். கமல் இயக்கி நடிக்கும் விஸ்வரூபம் படத்தை இயக்குனர் பாலு மகேந்திராவுக்கு போட்டுக் காட்டியுள்ளார்.
இதை பார்த்த இயக்குனரும் கமலின் நெருங்கிய நண்பருமான பாலுமகேந்திரா இவ்வாறு கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், "கமல் தன்னையே அர்ப்பணித்து, ஆய்வு செய்து, கடுமையாக உழைத்து படத்தை எடுத்திருப்பதைப் பார்த்தால் அவனுக்கு பைத்தியம் தான் பிடித்திருக்க வேண்டும்.
கமலுக்கு சினிமா மீது பைத்தியம். இந்த பைத்தியம் இருக்கும் வரை கமலை யாரும் அசைத்துக் கொள்ள முடியாது." என்று கூறியுள்ளார். கமலின் புகழ் பெற்ற மூன்றாம்பிறை படத்தை இயக்கியது பாலுமகேந்திரா என்பது குறிப்பிடத் தக்கது.
.jpg)






0 comments:
Post a Comment