இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

1/24/2013

இலங்கையிலும் தடை செய்யப்பட்ட கமலின் விஸ்வரூபம்

(MTM.பர்ஹான்)
இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் தவறாக சித்தரித்து நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் நாளை வெளிவரவிருந்த விஸ்வரூபம் திரைப்படத்திற்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் (SLTJ) சார்பாக ஜனாதிபதி, அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் இலங்கைத் திரைப்படக் கூட்டுத் தாபனம் ஆகியோரது கவணத்திற்கு விஸ்வரூபம் பிரச்சினை கொண்டுவரப்பட்டது. இறுதியாக இன்று காலை ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் (SLTJ) நிர்வாகிகள் நீதி அமைச்சர் ரவுப் ஹக்கீம் மூலமாக இன்று ஜனாதிபதியுடன் முஸ்லிம் எம்.பி க்கள் நடத்திய சந்திப்பில் இது தொடர்பாக பேசும்படி வேண்டிக் கொண்டதுடன் விஸ்பரூபத்தைத் தடை செய்வது குறித்த ஆவணங்களை ஜனாதிபதியிடம் கையளிக்கும் விதத்தில் ஒப்படைத்தார்கள்.
சற்று நேரத்திற்கு முன்பு இலங்கை திரைப்படக் கூட்டுத் தாபனத்துடன் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் (SLTJ) நிர்வாகிகள் மேற்கொண்ட அவசர சந்திப்பில் விஸ்வரூபம் திரைப்படம் தொடர்பில் செய்திகளைக் கேட்டறிந்த திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ‘திரைப்படம் என்பது பொழுது போக்காக இருக்க வேண்டுமே தவிர ஒரு மதத்தை நிந்தனை செய்வதாக இருக்கக் கூடாது. இது வரை காலமும் இலங்கையில் வெளியிடப்படும் திரைப்படங்களுக்கு நாம் இந்த நிபந்தனையைத் தான் விதித்துள்ளோம். ஆகவே இது தொடர்பாக சரியான முடிவெடுக்கப்படும்’ என்றும் தெரிவித்ததுடன் திரைப்படத்திற்கு தற்காலிக தடை விதிப்பதாகவும்> திரைப்படத்தின் காட்சிகளை முஸ்லிம் தலைவர் மற்றும் புத்தி ஜீவிகளுக்கு திரையிட்டுக் காட்டிய பின்பே தொடர்ந்தும் திரைப்படத்தை வெளியிடுவது தொடர்பில் முடிவெடுக்கப்படும் என்றும் திரைப்படக் கூட்டுத் தாபனத்தின் தலைவர் தெரிவித்தார்.
முற்றுகைப் போராட்டம் தற்காலிகமாக இடை நிறுத்தம்.

இதே வேலை ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் (SLTJ) சார்பாக நாளை 25.01.2012 ஜும்மா தொழுகையைத் தொடர்ந்து நடை பெறவிருந்த சினி சிட்டி திரையரங்கம் முற்றுகைப் போராட்டம் தற்காலிகமாக இடை நிறுத்தப்படுகின்றது என்பதை பொதுமக்களுக்கு அறிவித்துக் கொள்கின்றோம்.

குறிப்பு :
திரைப்பக் கூட்டுத் தாபன தலைவருடன் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள் நடத்திய சந்திப்பின் புகைப்படமும் திரைப்படக் கூட்டுத் தாபனத்திற்கு ஜமாத்தினால் வழங்கப்பட்ட கடிதத்தத்தை பெற்றுக் கொண்டதாக கூட்டுத் தாபனத்தின் முத்திரை பதித்துத் தந்த கடிதத்தின் பிரதியும் இணைக்கப்பட்டுள்ளன.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா