விஸ்வரூபம் படம் ஜனவரி 25ஆம் திகதி வெளியாக இருந்த நிலையில் 24ஆம் திகதி
தடை விதித்தது தமிழக அரசு. தமிழக அரசின் தடையை எதிர்த்து கமல் சார்பில்
சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி
வெங்கட்ராமன் படத்துக்கான தடையை நீக்கி 29.01.2013 இரவு 10 மணிக்கு
உத்தரவிட்டார். இதையடுத்து உடனே தமிழகம் முழுவதும் படத்தை வெளியிட கமல்
தரப்பு நடவடிக்கை மேற்கொண்டது
விஸ்வரூபம் படத்துக்கு தடை நீக்கப்பட்டதை எதிர்த்து தமிழக அரசு இன்று
(30.01.2013) மேல்முறையீடு செய்துள்ளது. அவசர வழக்காக எடுத்து விசாரிக்க
அரசு வழக்கறிஞர் நவநீதிகிருஷ்ணன் கோரிக்கை விடுத்தார். பிற்பகலில் வழக்கை
விசாரணைக்கு ஏற்பதாக ஐகோர்ட் நீதிபதிகள் தெரிவித்தனர்
இந்த நிலையில் தமிழகத்தின் பல இடங்களில் திரையிடப்பட்ட விஸ்வரூபம் படம்
பாதியிலேயே நிறுத்தப்பட்டது. அரை மணி நேரம் ஓடிய நிலையில் படம்
நிறுத்தப்பட்டது. ரசிகர்களுக்கு பணம் திருப்பி தரப்பட்டது. அப்போது
திரையரங்கு ஊழியர்களுக்கும், ரசிகர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
பொலிஸார் அவர்களை சமாதாப்படுத்தினர்
நாகை பாண்டியன் திரையரங்கில் அரசு அதிகாரிகளின் அறிவுறுத்தலால் படம்
நிறுத்தப்பட்டது. சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்பதால் படத்தை
நிறுத்த அதிகாரிகள் உத்தரவிட்டனர். ஈரோடு விஎஸ்பி தியேட்டரில் பொலிஸ்
அறிவுறுத்தலால் படத்தின் காட்சிகள் ரத்து செய்யப்பட்டது. கோவில் பட்டியில்
படம் தொடங்கும் முன்பே திரையிடுவதை பொலிஸார் தடுத்து நிறுத்தினர். சேலம்
கேஎஸ் திரையரங்கிலும் விஸ்வரூபம் படத்தை திரையிட பொலிஸார்
தடுத்துநிறுத்தினர்.
0 comments:
Post a Comment