
BBC: இலங்கையில் பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை குறைந்த வயதிலேயே உள்வாங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. மாணவர்களை ஓரிரண்டு ஆண்டுகள் முன்கூட்டியே பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்குவதற்காக பள்ளிக்கூடங்களிலும் மாணவர்களை 4 வயது போன்ற குறைந்த வயதிலேயே சேர்க்க முடியுமா அல்லது 7 முதல் 10-ம் வகுப்பு வரையான வகுப்புகளில் ஒன்றைக் குறைக்க முடியுமா என்று ஆராய்ந்துகொண்டிருப்பதாக உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க கூறினார்.
கடந்த தினங்களில் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மற்றும் பீடாதிபதிகள் கலந்துகொண்ட வதிவிட கருத்தரங்கின்போது இதுபற்றி ஆழமாக ஆராயப்பட்டதாக உயர்கல்வி அமைச்சர் தெரிவித்தார். கல்வித்துறை சார்ந்த நிபுணர்கள் இந்த விவகாரம் குறித்து ஆராய்ந்துவருவதாகவும் அமைச்சர் திசாநாயக்க மேலும் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment