இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

1/07/2013

கதறக் கதற மனைவியை தெருவில் குத்திக் கொன்ற கணவன் கத்தியுடன் பொலிஸில் சரண்!

வீதியில் மனைவி வேண்டாம் என்று கதறக் கதறக் கத்தியால் குத்திப் படுகொலை செய்துவிட்டு, கொலைக்கு பயன்படுத்திய கத்தியுடன் கணவன் நீர்கொழும்பு கொச்சிக்கடை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் 2013.01.03 பிற்பகல் 1.30 மணியளவில் கொச்சிக்கடை, வெலியேன 18 ஆம் கட்டை பிரதேச வீதியோரத்தில் இடம்பெற்றுள்ளது.

கொச்சிக்கடை, மோலவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த ரேகிணி துஷாரி என்ற 29 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயாரே கணவனால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். 
குடும்பத் தகராறு பூதகரமானதன் விளைவாகவே இக் கொலை இடம்பெற்றிருப்பதாக ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரிய வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடலின் பல இடங்களில் வெட்டுக்காயங்கள் காணப்படுகின்றன.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா