இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

1/12/2013

பதுளையில் கறுப்பு மழை பொழிந்தது


சீரற்ற காலநிலையினையடுத்து பதுளை, லுணுகலைப் பகுதியில் நேற்று காலை கறுப்பு மழை பெய்துள்ளது.

இம்மழை சுமார் அரை மணித்தியாலம் நீடித்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.



லுணுகலைப் பகுதியில் அடாவத்தை பெருந்தோட்டத்திலேயே இக்கறுப்பு மழை பெய்துள்ளது. தோட்ட மக்கள் இம் மழை நீரை பாத்திரங்களில் சேகரித்துள்ளனர்.



இது தொடர்பாக வானிலை அவதான நிலையம் மற்றும் இடர்முகாமைத்துவ நிலையம் ஆகியவற்றுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.



இம் மழை பெய்த போது வெயிலில் உலர வைக்கப்பட்டிருந்த வெள்ளை உடைகள் கறுப்பாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா