அம்பாறை மாவட்டம் நிந்தவூர் அட்டப்பள்ளம் பிரதேச ஆற்றில் குளிக்கச் சென்ற ஆசியரியர் ஒருவர் காணாமல் போய்யுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இச் சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (08) மாலை இடம்பெற்றுள்ளதாக சம்மாந்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவின் திராய்க்கேணி கிராமத்தில் வசித்து வந்த வெள்ளக்குட்டி கணகரத்தினம் வயது 48 என்பவரே இச்சம்பவத்தில் காணாமல் போயுள்ளதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
காணாமல் போயுள்ள இவ் ஆசிரியர் பாண்டிருப்பு பிரதேசத்தில் திருமணம் முடித்துள்ளதுடன் நிந்தவூர் அட்டப்பள்ளம் கிராமப் பாடசாலையொன்றில் ஆசிரியராகவும் தொழில் புரிந்து வந்துள்ளார். இவர் வழமையாக பாடசாலை விட்டு திராய்க்கேணிக்கு வரும் வழியில் இவ்வாற்றில் குளித்துச் செல்வதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவதினத்தன்று மழை வெள்ளம் காரணமாக ஆற்றில் அதிகளவிலான நீர் பாய்ந்து சென்றமையினால் இவர் நீரினால் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்றும் இவரை நேற்று மாலையிலிருந்து பொலிஸாரும் பொதுமக்களும் தேடும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர் குளிக்கச் சென்ற இடத்தில் அவர் அணிந்திருந்த ஆடைகளும், பாதணியும் மரம்மொன்றில் அருகில் வைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுவதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற் கொண்டுவருகின்றனர்.
0 comments:
Post a Comment