இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

1/15/2013

சவூதியில் இலங்கை பணிப்பெண் மீது தாக்குதல்! எரிகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதி


இலங்கை பணிப் பெண்ணொருவர் சவூதி அரேபியாவில் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஒரு வருடத்துக்கு முன்னர் பணிப் பெண்ணாக சவுதி அரேபியாவுக்குச் சென்ற கொழும்பு, புளூமென்டல் பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய அங்கஸ் பெரேரா என்பரே தாக்குதலுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்தப் பெண் தொழில் வழங்குனரினால் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு தாக்கப்பட்ட நிலையில் வீதியில் வீசப்பட்டுள்ளார். இதனையடுத்து பொலிஸார் குறித்த பெண்ணை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
குறித்த பெண்ணின் உடலில் வெட்டுக்காயங்கள், எரிகாயங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா