யாழ் குருநகர் பகுதியில் மீட்கப்பட்ட வெடிபொருள்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் இன்று மாலை திடீரென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் கிளிநொச்சி மாவட்ட அலுவலகத்தில் தேடுதல் நடாத்தினர் இதன் போது இலுவலகத்திலிருந்து வெடிபொருள்கள், ஆபாசப் படங்கள், உள்ளூர் பெண்கள் பலரது படங்கள், ஆணுறைகள் என்பன மீட்கப்பட்டுள்ளதுடன் சிறிதரனின் பிரத்தியேக செயலாளரான வேழமாலிதன் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இரண்டு தினங்களுக்கு முன்னர் யாழ் குருநகர் பகுதியில் மீட்கப்பட்ட சுமார் பதினொன்றரை கிலோகிராம் எடையுடைய சி-4 ரக வெடிபொருள்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட பயங்கரவாத தடுப்புப் பிரிவினர், இந்த வெடிபொருள்களை குருநகர் பகுதிக்கு கடத்தி வந்தவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் பிறேமராஜ் ராஜசேகரன்(வயது 31) மற்றும் பி.வசந்தன் (வயது 21) ஆகிய இரண்டு இளைஞர்களைக் கைதுசெய்யப்பட்டு மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் கொடுத்த வாக்குமூலத்தின்படி மேற்படி வெடிபொருள்கள் புதுக்குடியிருப்புப் பகுதியிலிருந்து குருநகருக்கு எடுத்துவரப்பட்டதாகக் கண்டுபிடிக்கப்பட்டதாக பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் தெரிவித்தனர்.
இந்த வெடிபொருள்கள் கிளிநொச்சியிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் அலுவலகத்துக்கு எடுத்துவரப்பட்டே குருநகருக்கு பின்னர் கொண்டுசெல்லப்பட்டிருப்பதாகவும், சிறிதரனின் பிரத்தியேகச் செயலாளர் வேழமாலிதன் இந்த வெடிபொருள் கடத்தலுடன் தொடர்புபட்டிருந்ததாகவும் தெரியவந்ததையடுத்தே சிறிதரனின் அலுவலகத்தில் தேடுதல் நடத்தப்பட்டதாக பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் கூறினர்.
இந்தத் தேடுதல் நடவடிக்கையின்போது சுமார் 300 கிறாம் எடையுள்ள சி-4 ரக வெடிபொருள்கள் சிறிதரனின் அலுவலகத்திலிருந்து மீட்கப்பட்டதாகத் தெரிவித்த பயங்கரவாத தடுப்புப் பிரிவினர், மேலும் ஆபாசப் படங்கள், ஆணுறைகள் என்பனவும் அங்கிருந்து மீட்கப்பட்டதாகவும் கூறினர்.
இவ்வாறு மீட்கப்பட்ட ஆபாசப் வீடியோ படங்கள், பல பெண்களின் பிரத்தியேக படங்கள், ஆணுறைகள் என்பவற்றை ஊடகவியலாளர்கள் முன்னிலையில் சிறிதரனின் ஊடகச் செயலாளர் பொன்னம்பலம் லக்சுமிகாந்தன் காண்பித்தார்.
இவற்றை விட கிளிநொச்சி மாவட்டத்தில் பிரதேச ரீதியாக அமைந்துள்ள படை முகாம்கள் தொடர்பான விபரங்கள் மற்றும் அரசாங்கத்துக்கு எதிரான பல கருத்துக்களை வெளிப்படுத்தும் காண்பியங்களுடன் கூடிய ஆவணங்கள் என்பனவும் கைப்பற்றட்டதாக பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் ஊடகவியலாளர்களுக்கு காண்பிக்கப்பட்டது.
சம்பவத்தையடுத்து, கிளிநொச்சி மாவட்ட பொலிஸ் குற்றத்தடுப்புப் பிரிவினர் அங்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டதுடன், பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் பிரத்தியேகச் செயலாளர் வேழமாலிதனைக் கைதுசெய்து அழைத்துச் சென்றுள்ளனர்.
0 comments:
Post a Comment