இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

1/07/2013

தேசத்துக்கு மகுடம் தேசிய கண்காட்சியை முன்னிட்டு அம்பாறையில் துரித அபிவிருத்தி

(ஹனீபா)
அம்பாறை மாவட்டத்தில் 2013ம் ஆண்டு பெப்ரவரி 05ம் திகதி ஆரம்பித்து வைக்கப்படவுள்ள தயட்ட கிருல்ல தேசத்துக்கு மகுடம் தேசிய கண்காட்சி திடலான அம்பாறை கொண்டவட்டுவான் ஹாடி உயர் தொழில் நுடபக் கல்லூரியினை சுற்றியுள்ள பிரதேசம் துரிதமாக இரவு பகலாக மழை வெள்ளம் பாராமல் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றன.

இப்பிரதேசத்தில் பாதைகள் காரியாலய கட்டிடங்கள் உட்பட சகல துறைகளிலும் அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன அத்துடன் கண்காட்சித்திடலை அழகு படுத்துவதுடன் கண்காட்சியின் போது கான்பிக்கப்படவுள்ள விவசாயத்திணைக்களத்தின் பயிர்கள் அனைத்தும் உரிய காலப்பதுதிக்குள் காய்க்கும் வகையில் பயிர்கள் நடப்பட்டு அழகுற காட்சியளிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

அதுமாத்திரமன்றி பாதுகாப்பு தரப்பினருடைய கண்காட்சிக் கூடங்கள், இலங்கையிலுள்ள சகல அமைச்சுக்களுக்குமான கூடங்கள் போன்றன உள்ளிட்ட சகல பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன

இக்கண்காட்சி பிரதேசங்களை அழகுபடுத்தும் பணிகளில் பாதுகாப்பு படைகளை சேர்ந்த உத்தியோகத்தர்கள் கூடுதலாக ஈடுபட்டு வருகின்றனர்
இக்கண்காட்சிப் பிரதேசங்களில் இருந்து எடுக்கப்பட்ட படங்கள் சில இணைக்கப்பட்டுள்ளன.





0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா