இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

1/08/2013

மாவனல்லை மஸ்ஜிதுல் ஹுதா பள்ளிவாசல் நிர்வாக தெரிவும் - சர்ச்சைகளும்

-அப்துல் குத்தூஸ்-

மாவனல்லையில் அண்மையில் மஸ்ஜிதுல் ஹுதா பெரிய பள்ளிவாசல் நிர்வாக தெரிவு தேர்தல் 2012 டிசம்பரில் இடம் பெற்றது.


தேர்தலில் முறைகேடுகள் இடம் பெற்றுள்ளதாக் ஊர் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். பள்ளிவாசளுடன் சம்மந்தம் இல்லாதவர்கள், வாக்குக் கேட்டவர்களால் பள்ளிவாசல் சந்தா பணம் செலுத்தப பட்டு, வாக்களிக்க முச்சக்கர வண்டிகளில் அழைத்து வரப் பட்டதாக தெரிவிக்கப் படுகிறது. மூன்று உறுப்பினர்கள் நிர்வாக சபைக்கு தங்களை தாங்களே நியமித்துக் கொண்டு,
பின் கதவால் பள்ளிவாசல் நிர்வாகத்துக்குள் ஊடுருவியதன் காரணமாக 28. 12. 2012 , 04.01.2013 ஆகிய வெள்ளிக் கிழமைகள் ஜும்மாவின் பின்னர் பள்ளிவாசலில் ஊர் மக்களுக்கும் தெரிவு செய்ய பட்ட மசூராக் குழு/ புதிய நிர்வாக சபைக்கும் பிரச்சினைகள் உருவாகியுள்ளன. கைகலப்புகளும் இடம்பெற்றுள்ளன.



சில மாதங்களுக்கு முன்னர் மாவனல்லை தவ்ஹீத் ஜமாஅத்தினைரை பள்ளியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று ஜமாத்தே இஸ்லாமி கொண்டு வந்த தீர்மானம் ஊர் மக்களால் தோற்கடிக்கப் பட்டது.



நிர்வாக சபைத் தெரிவு பள்ளிவாசல் சட்டக் கோவைக்கு முரணான முறையில் தெரிவு செய்யப் பட்டதாக ஊர் மக்களில் ஒரு பகுதியினர் குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து, வக்பு சபையின் பிரதிநிதி ஒருவர் சென்ற வெள்ளிக்கிழமை விசாரணைக்காக வருகை தந்திருந்தார். ஜும்மாவைத் தொடர்ந்து விசாரணை பகிரங்கமாக இடம் பெற்றது. புதிய நிர்வாகம் பொது மக்களை கருத்து சொல்ல அனுமதிக்கவில்லை.



அப்பொழுது கருத்து சொல்ல முன்னே சென்ற சமூக சேவையாளரும், சாஹிரா கல்லூரி பழைய மாணவர்கள் சங்கத் தலைவருமான எம். எஸ். எம். காமில் அவர்கள், புதிய நிர்வாக சபை ஆதரவாளர் ஒருவரால் தாக்கப் பட்டார். அதனைத் தொடர்ந்து பள்ளிவாசலில் பெரும் கூச்சலும், குழப்பமும், மோதல் நிலைமைகளும் ஏற்பட்டன.



நிலைமைகளை நேரில் கண்டறிந்த பின்னர், புதிய நிர்வாக சபை தெரிவை வக்பு சபை பிரதிநிதி தற்காலிகமாக இடை நிறுத்தம் செய்தார். இதனைத் தொடர்ந்து வக்பு சபை பிரதிநிதியை புதிய நிர்வாக அங்கத்தவர்கள் வசைமாரி பொழிந்தனர்.




முஸ்லிம்களுக்கு நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு மத்தியில் மாவனல்லையில் இவ்வாறு நடக்கும் நிகழ்வுகள் குறித்து கல்விமான்கள் கடும் கவலை வெளியிட்டுள்ளனர். 



தற்பொழுது சிலர் சப்ரகமுவ முதலமைச்சர் மகிபால ஹேரத் அவர்களை இந்த விடயத்துக்குள் கொண்டு வந்து அரசியல் செல்வாக்கி பாவிக்க முயற்சி எடுக்கின்றனர்.



இந்நினலமையில் தேர்தலில் தெரிவு செய்யப்பட 2 அங்கத்தவர்கள் ராஜினாமா செய்ய உள்ளதாக தெரிவித்து உள்ளனர்.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா