அம்பாறை மாவட்ட இரானுவத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட சர்வ மதத் தலைவர்களின் மாநாடு நேற்று முந்தினம் (12) சனிக்கிழமை கல்முனை சுபத்திராராம விகாரையில் அம்பாறை மாவட்ட இரானுவக் கட்டளைத் தளபதி லெப்டினன் கோனல் ஹரீன் பெரேரா தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ மதத் தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்
இங்கு பல்வேறு மதத் தலைவர்களினாலும் கருத்துப் பரிமாறல்கள் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும் மதத் தலைவர்கள் என்பவர்கள் கௌரவத்துக்குரியவர்கள்; மதத் தலைவர்கள் தங்களது கடமைகளை சரிவரச் செய்து மற்றவர்களுக்கு முன்மாதிரியானவர்களக எடுத்துக்காட்டாக வாழ வேண்டும் அப்போதுதான் ஏனையவர்கள் சரியான முறையில் வாழ முற்படுவார்கள் அத்துடன் மதத் தலைவர்களை மதித்து கௌரவம் வழங்குவர்.
சகலரும் சகல மதங்களினதும் கருத்துக்களையும் ஏற்று செயற்படவேண்டும் சகல மதங்களினதும் கொள்கைகளைப்பற்றி படித்து அறிந்திருக்க வேண்டம் எந்த ஒருமதமும் கெட்ட தீய செயற்பாடுகளில் ஈடுபடுமாறு கூறவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டன.
இம்மாநாட்டில் அம்பாறை மாவட்ட பள்ளிவாசல் சம்மேளத் தலைவர் டாக்டர் எஸ்.எம்.ஏ.அஸீஸ், காரைதீவு 631வது படைபிரிவின் பிரிகேடியர் கொமாண்டர் கேர்னல் பிரியந்த கமகே உட்பட சர்வமத பெரியார்கள், இரானுவ உயரதிகாரிகள் பலரும் கலந்து கொண்டார்.








0 comments:
Post a Comment