இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

1/29/2013

நண்பனுக்காக உயிர் நீர்த்த நண்பன்

கல்லடி கடற்கரைக்கு குளிக்கச் சென்ற நண்பனை காப்பாற்ற சென்று காணாமல் போன மாணவன் நாவற்குடா கடற்கரைப் பகுதியில் இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளான்.

நேற்று திங்கட்கிழமை மட்டக்களப்பு கல்லடி கடற்கரைக்கு குளிக்கச் சென்ற நண்பனை காப்பாற்ற சென்று காணாமல் போன மட்டக்களப்பு கல்லடி சிவாநந்தா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் 16 வயது மாணவன் ஜெகநாதன் டிலுஷ்காந்; மட்டக்களப்பு மஞ்சன்தொடுவாய் கடற்கரை நீர் ஓடைக்கு அருகாமையிலுள்ள நாவற்குடா கடற்கரைப் பகுதியில் இறந்த நிலையில் இன்று பிற்பகல் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட இம்மாணவனின் சடலத்தை பிரேத பரிசோதனையின் பின்னர் ஜெகநாதன் டிலுஷ்காந்தின் குடும்பத்துக்கு ஒப்படைக்கவுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு கல்லடி சாந்தி தியேட்டருக்கு அருகாமையில் வசிக்கும் குறித்த மாணவன் இம்முறை 2012ம் ஆண்டு நடைபெற்ற கல்விப்பொதுத் தராதரப் பத்திர சாதாரணதரப் பரீட்சைக்குத் தோற்றி பெறுபேறுகளுக்காக காத்திருந்த மாணவன் என்பது குறிப்பிடத்தக்கது.


0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா