(ஹனீபா)
அம்பாறை மாவட்டத்தின் கரையோரப்பிரதேசங்களான சம்மாந்துறை பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்டவளத்தாப்பிட்டி,மல்வத்தை,மஜீட்புரம்,இஸ்மாயீல்புரம், நெய்னாகாடு, சென்னல் கிராமம்,கல்லரிச்சல்,வீரமுனை போன்ற எல்லைக் கிராமங்களில் காட்டு யாணைகளினால் நாளாந்தம் பல இன்னல்களையும் கஷ;டங்களையும் மக்கள் எதிர்நோக்கி வருகின்றனர்.
அம்பாறை மாவட்டத்தின் கரையோரப்பிரதேசங்களான சம்மாந்துறை பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்டவளத்தாப்பிட்டி,மல்வத்தை,மஜீட்புரம்,இஸ்மாயீல்புரம், நெய்னாகாடு, சென்னல் கிராமம்,கல்லரிச்சல்,வீரமுனை போன்ற எல்லைக் கிராமங்களில் காட்டு யாணைகளினால் நாளாந்தம் பல இன்னல்களையும் கஷ;டங்களையும் மக்கள் எதிர்நோக்கி வருகின்றனர்.
இந்தக் காட்டு யாணைகளின் வருகையினால் பல்வேறு சவால்களுக்க மத்தியில் செய்கை பண்ணப்பட்டு வருகின்ற வேளாமை மற்றும் வீட்டுத்தோட்டங்கள் என்பவற்றை அழித்து நாசப்படுத்தி வருவதாகம் அத்துடன் வீடுகளுக்குள்ளும் வருகை தந்து அங்கு வைக்கப்பட்டிருக்கும் பொருட்களையும் உடைத்து நாசப்படுத்தவதாகவும் தெரிவிக்கின்றனர்.
இது மாத்திரமன்றி மனித உயிர்களுக்கும் உத்தரவாதமற்ற முறையில் உயிரைப் பணயம் வைத்த வாழ்க்கை வாழ்ந்து வருவதாகவும் அம்மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இதே சமயம் கடந்த 25ம் திகதி இரவு கொட்டும் மழைக்க மத்தியில் வளத்தாப்பிட்டியில் வேளாமைக் காவலில் இருந்த விவசாயி இருவர் யாணையின் தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் ஸ்தலத்திலே உயிரிழந்துள்ளார் மற்றுமொருவர் பலத்த காயங்களுடன் இன்றா நாளையா என்ற நிலையில் அம்பாறை வைத்திய சாலையில் உயிருக்காக போராடிக் கொண்டிருக்கின்றார்.
அதே பொன்று இம்மாதம் முதலாம் வாரத்தில் கூட இருவர் மரணித்துள்ளனர் மற்றும் நேற்று இரவு கூட பலர் ஒன்று செர்ந்து வேளாமைக்காவலில் இருந்த கொண்டிருக்கும் போது பட்டளமாக வந்த யானைகளால் விரட்டப்பட்டு தெய்வாதீனமாக உயிர் பிழைத்துள்ளனர்.
இவ்வாறான நிலைகளில் பாதிக்கப்பட்ட அப்பிரதேச மக்கள் சம்மந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்துக்கு பலமுறை அறியப்படுத்தியும் இந்த யாணைகளை விரட்டுவதற்கான நிரந்தர நடவடிக்கை எடுக்காமையினையிட்டு கடந்த 26ம் திகதி இப்பிரதேச மக்கள் மற்றும் அங்கு வேளாமை செய்து வரும் விவசாயிகள் ஒன்றினைந்து இந்தப் பிரதேச மக்களுக்கும் அவர்களின் உடமைகளுக்கும் பாதுகாப்பை ஏற்படுத்தக் கோரி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இந்தப் பிரதேச மக்களதும் விவசாயிகளினதும் கோரிக்கைகளை உதாசீனப்படத்தாது துரிதமாக நிரைவேற்றுக் கொடுக்க வேண்டுமென சம்மந்தப்பட்ட அதிகாரிகளை அப்பிரதேச பொதுமக்களும் பொதுநல அமைப்புக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
0 comments:
Post a Comment