அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பிரதேச சபை ஊழியர்களின் வருடாந்த ஒன்று கூடலும் உத்தியோகத்தர்கள் கௌரவிப்பு நிகழ்வும் (07) சம்மாந்துறைப் பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.எம்.நௌஷhட் தலைமையில சம்மாந்துறை ஜனாதிபதி கலாசார விளையாட்டரங்கில்; நடைபெற்றது.
சம்மாந்துறைப் பிரதேச சபையின் வரலாற்றில் ஒருபோதும் இடம்பெற்றிராத ஒரு வரலாற்று நிகழ்வாக நடைபெற்ற இந்நிகழ்வில் சகல உத்தியோகத்தர்களும் தங்களது குடும்ப சகிதம் கலந்து கொண்டதுடன் பல்வேறு கலை நிகழ்வுகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகளிலும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் ஏ.ஜே.எம்.இர்ஷhட் கலந்து கொண்டார்;. கேளரவ அதிதிகளாக உப தவிசாளர் ஏ.கலீலுர்றஹ்மான், பிரதேச சபை உறுப்பினர்களான ஏ.ஜீ.ஏ.ஷpப்லி, சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முஸ்தபா, ஏ.பி.அச்சிமுஹம்மட், பீ.எம்.மீராமுகைடீன், எம்.ஐ.எம்.றனூஸ்,பீ.தியாகரண், செயலாளர் ஏ.ஏ.சலீம் உட்பட ஊழியர்கள் சகலரும் கலந்து கொண்டனர்.
மெலும் இந்நிகழ்வில் போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் மற்றும் சிறந்த பணியாளர்கள் மற்றும் சேவையிலிருந்த ஓய்வு பெற்றவர்கள் ஆகியோருக்கு நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
0 comments:
Post a Comment