-ஹனீபா-
அம்பாறை மாவட்டத்தில் மழை காரணமாக ஆலையடிவேம்பு பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கை கட்டுப்படுத்தும் நோக்குடன் ஆலையடி வேம்பு பிரதேச செயலாளர் வீ.ஜெகதீசன் மற்றும் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பி.எச். பியசேனவின் செயலாளர் ரீ.ஜெயாகர் ஆகியோர்கள் தலைமையிலான குழுவினர் நேற்று மாலை (25) ஆலையடிவேம்பு பிரதேசத்திலுள்ள கடலும் களப்பும் அருகருகே சந்திக்கின்ற சின்ன முகத்துவாரம் பிரதேசத்தில் வடிச்சல் கான்கள் வெட்டுவதையும், அதேபோன்று பணங்காட்டு பாலத்தின் கீழ் நிறைந்து காணப்படும் சல்பீனியா தாவரத்தை கனரக இயந்திரத்தின் உதவியுடன் அப்புரப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர் இந்நிகழ்வின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில இணைக்கப்பட்டுள்ளது.








0 comments:
Post a Comment