TM : அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களில் கடந்த ஜனவரி 01 ஆம் திகதியிலிருந்து
இன்று வரை 106 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக கல்முனை பிராந்திய
சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் எம்.எஸ்.இப்றாலெப்பை தெரிவித்தார்.
இதில், சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்துக்குட்பட்ட பகுதியில் 47 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.
அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசங்களில் - சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்துக்குட்பட்ட பகுதிகளிலேயே மிக அதிகளவு டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இதற்கு அடுத்ததாக கல்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்துக்குட்பட்ட பிரதேசங்களில் 20 பேரும், நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்துக்குட்பட்ட பிரதேசங்களில் 10 பேரும் டெங்கு நோயாளர்களாக இனங்காணப்பட்டுள்ளார்கள் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
எவ்வாறிருந்தபோதும், அம்பாறை கரையோர பிரதேசங்களில் இந்த வருடம் டெங்கு நோய் தாக்கத்தினால் மரணங்கள் எவையும் பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment